மதங்கள்
53
கள் யூதர்கள் மத்தியில் வெறுப்பைத் தோற்றுவித்தது. இயேசுவின் அருள் வடிவும், எளிமை வாழ்வும் அன்பு மனமும் மக்களை ஈர்க்கும் விதத்தைக் கண்ட சிலர் பொறாமை கொண்டு அவர், மீது அவதூறுகளைப் பரப்பினர்.
அழுக்காறு கொண்ட ஒரு யூதர்கள் கூட்டம் சதி செய்து அவரது முடிவுக்குக் காரணமாயிற்று. “ஒரு மனிதனின் சாவு, பல மக்களின் துன்பங்களிலும் மேலானது” என்று அடிக்கடி சொல்லி வந்த அன்னாஸ் என்பவன், அச்சதி நாடகத்தில் கதாநாயகனாக மாறினான். இயேசுவின் சீடர்களிலே ஒருவனான ஜூடாஸ் என்பவன் துரோகியாக மாறி ஒருசில வெள்ளிக் காசுகளுக்காக இயேசுவைக் காட்டிக்கொடுத்தான்.
ஒலிவ் மலையில் சீடர்கள் அயர்ந்த தூக்கத்தில் இருக்கும் இரவில், ஜெபம் செய்த வேளையில் காட்டிக்கொடுத்த ஜூடா சின் பின்னே ஆயுதம் தாங்கிய காவலர்கள் புகுந்து இயேசுவைச் சூழ்ந்தனர். அவரைக் கைது செய்து வழக்கு மன்றத்திற்கு இட்டுச் சென்று விசாரிப்பதுபோல நாடகம் நடத்தினர். ‘கடவுளின் புனிதத்தைக் கெடுக்கவே நீ உபதேசம் செய்கிறாய். நீ கடவுளின் குமாரன் என்று பொய் சொல்கிறாய். தேவலயத்தை இடிப்பேன் என்று பாவ வார்த்தை பேசினாய் என்பதாக இப்படி அனேக குற்றங்களைச் சாட்டி விசாரித்து, மரண தண்டனை விதிப்பது என்று முடிவு செய்தனர். அம்முடிவை ஊர்ஜிதம் செய்யவேண்டியவன் பிலாத்து என்னும் மன்னன். அவன் முன்னே இயேசு இழுத்துவரப்பட்டார்.’ அவருடைய அருள் வடிவையும் சாந்தத் தன்மையையும் கண்ட பிலாத்தே அவருடைய கருத்து என்னவென்றான். “பரலோக ராஜ்யத்தை உருவாக்குவதே என் நோக்கம். என்னுடைய ராஜ்யம் பரமண்டலமே” என்றார் இயேசு. இவர் ஒரு கற்பனவாதியே தவிர, குற்றவாளி அல்ல என்று முடிவு செய்த பிலாத்தே, அவரை விடுவிக்க எண்ணி மக்களின் முன்னே சொன்னான்: திருவிழாக் காலத்தில் மக்கள் முன்னே குற்றவாளியை நிறுத்தி அவர்களை விடுவிக்கலாமா என்று கேட்டு, மக்கள் விடுவிக்கச் சொல்பவர்களை விடுதலை செய்யும் வழக்கம்