பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



யூத மதம்

சிய்ை மலைச் சிகரத்தில் அலைந்தபோது தனக்கு புலனான சில அரிய ஆத்மீக கருத்துக்களை மோசஸ்” யூதர்களுக்கு அறி வித்தான். முற்காலத்தில் எகிப்து நாட்டை ஆண்ட பரோ” மன்னன் ஒருவனுடைய மகளுக்கு வளர்ப்புப் பிள்ளையாக இருந்தவன் இந்த மோசஸ் என்கிறது பைபிள். ஒரு சமயம் இவருடைய தந்தை ஆப்ரகாம் சுதந்திர வேட்கை கொண்டு உரு என்ற ராஜ்யத்தை விட்டு வெளியேறி, கேன்னன் என்ற செழிப்பான பகுதிக்கு வந்தார். அவருடன் வந்த மக்களுக்கு வீரம் மிகுந்து வலிமை பெருகும் காலம் வரை அங் கேயே வாழ்ந்தார்கள். கடைசியில் பரோக்கள் வாழும் நாட்டிற்கு வந்து வறுமையை அனுபவித்தனர். இந்த மக்க ளின் வரலாறு மோசஸைக் கவர்ந்தது. ஒரு நாள் எகிப்தியன் ஒருவன் இந்தக் கூட்டத்தில் உள்ள யூதனை இரக்கமின்றிச் சாட்டையால் அடிப்பதைக் கண்டு ஆத்திரப்பட்ட மோசஸ் தன் ஈட்டியால் அந்த எகிப்தியனைக் கொன்றுவிட்டான். எதிர் பாராத இந்த நிகழ்ச்சி மோசசின் மனதை மிகவும் வாட்டிய தால், மன அமைதி வேண்டி, பாலைவனத்திற்கு ஒடி, அங்கே சுற்றியலைந்தபோதுதான் மோசஸ் மெய்யறிவு பெற்றதாகக் கூறப்படுகிறது. தனித்துப் பாலைவன மணற்பரப்பிலே சுற்றிக்கொண்டிருந்தாலும் எகிப்து நாட்டில் கசையடி பட்டுக்கொண்டு வாழும் அடிமை யூதர்களை அவனால் மறக்க முடியவில்லை. அவர்களை அக் கொடுமையிலிருந்து மீட்டு: ஒன்று சேர்த்து, சுதந்திர மனிதர்களாக்கி, அவர்களுக்கென்று