பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

உலக

7. கலப்படம் செய்யாதீர்கள்.

8. திருடாதீர்கள்.

9. அடுத்தவனுக்கு எதிராகப் பொய்சாட்சி சொல்லாதீர்கள்.

10. அடுத்தவனின் வீடு, மனைவி, பணியாள், பணிப்பெண், எருது, கழுதை எதிலும் ஆசை வைக்காதீர்கள்.

மோசசின் இந்தப் பத்துக் கட்டளைகள்தான் யூதர்களின் மத்தியில் செல்வாக்குப் பெற்ற வேதமாகும். தெய்வ காணிக்கை, சம்பிரதாயம், சடங்கு எதுவுமற்ற எளிமையான கடவுள் வழிபாடும், தொண்டும்தான் மோசசின் உபதேசம்.

தனி இனமாக, தலைமை வாரிசு முறையில் பலகாலம் வாழ்ந்த யூதர்களின் முதல் மன்னன் ‘சாவுல்’. அவனுக்குப் பிறகு டேவிட்டும், அவன் மகன் சாலமனும் ஆண்டார்கள். சாலமன் காலத்தில் ஜெருசலத்தில் செல்வத்தைப் பெருக்கினான். யூதர்கள் போற்றும் தேவாலயம் சாலமனால் ஜெருசலத்தில் கட்டப்பட்டதாகும். அந்தக் கோயில் பாபிலோனியர்கள் படையெடுப்பினால் எரித்துத் தரை மட்டமாக்கப்பட்டது. பர்சிய சக்கரவர்த்தி சைரஸ், பாபிலோனியாவில் வெற்றி முழக்கத்தோடு நுழைந்தபிறகு யூதர்களுக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்பட்டதால், மீண்டும் ஜெருசலம் புதுப் பொலிவு பெற்றது. கோவில் புதுப்பிக்கப்பட்டது. பழைய ஏற்பாடுகள் என்று கிருத்தவர்களால் சொல்லப்படும் வேதநூலின் முதல் ஐந்து புத்தகங்கள் யூதர்களின் ஆதிவழி நூலாகக் கருதப்படுகின்றன. யூதர்களின் மதக் கோட்பாட்டின் அடிப்படை பைபிள். மனிதலுக்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்பையும் கடைப்பிடிக்க வேண்டிய சட்டங்களையும் அது கற்பிக்கிறது. பைபிள் முப்பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1. சட்டம் 2. தீர்க்க தரிசனம் 3. பிரபந்தம்.

சட்டம் என்பது மோசசின் 5 புத்தகங்கள். உலக உற்பத்தி பற்றிய கதைகளும், சட்டத்தை உருவாக்கியவரின்