பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சி செய்த பேன வீரர்கள் :

1. ரூசோ

“மனிதர்கள் எங்கும் சுதந்திரமாகவே பிறக்கிார்கள். ஆனல் என்றும் தளைகளால் பூட்டப்பட்டிருக்கிறர்கள். என்று சொன்னவன் ரூசோ. மன்பதையை தட்டி எழுப்பி மகத்தான பிரெஞ்சுப் புரட்சிக்கு, எழுத்துக்கள் என்ற வல்லமை மிக்க வெடி குண்டுகளால் சமுதாய ஒப்பந்தம் (Social contact) என்ற நூலே ஆக்கித் தந்தவன் ரூசோ. அவன் எழுகிய சமுதாய ஒப்பந்தம் என்ற நூலையும் எமிலி என்ற தலைப்பில் கல்வியைப் பற்றிய நூலையும், எதிர்மறைக் கருத்துக்களைப் பொறுக்காத பிரஞ்சு அரசாங்கம், பாரிஸ் நகரத்தின் உயர்நீதி மன்றத்தின் முன்னுல் கொளுத்த ஆணேயிட்டும், அந்த நூல்களே யார் படித்தாலும் யார் வைத்துக்கொண்டிருந்தா லும் இந்தத் தீயில் கொண்டுவந்து போடவேண்டும் என்று கட்டளையிட்டிருந்தும், அவன் சொன்ன சமத்துவம், சகோதரத் துவம், ஜனநாயகம் என்ற குரல் வான்முட்ட வையமெல்லாம் கேட்ட வண்ணமுள்ளன.

அவனைச் சுதந்தரத் தந்தை என்றனர் அறிஞர்கள். மனித இனம் எங்கோ தொலைத்துவிட்டிருந்த சுதந்தரத்தைத் தேடித் தந்தவன் ரூசோ என்று பாராட்டினர் பல்லோர்.

“மனிதர்களைப் பற்றி சிந்திப்பது மனிதர்களின் கடமை” என்று சாக்ரடீஸ் சொல்லியதைப் போல மற்றெல்லாரையும் விட மனிதர்களைப் பற்றி அதிகம் சிந்தித்தவன் ரூசோ, சிந்தித்த