பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புரட்சி செய்த பேனா வீரர்கள்

63

“தோடு நில்லாமல் மக்களைச் செயல்படத் தூண்டினான். மக்களுக்கு மதகுருக்கள் துணை; மதகுருக்கள் மன்னனுக்குத் துணை; மன்னனுக்கும் மதகுருக்களும், ஆண்டவனும் துணை; அப்படியென்றல் ஆண்டவனுக்கு யார் துணை? ஆண்டவனுக்கும் ஒரு துணையிருக்குமானால் இதோ இந்த சேரியிலும், சகதியிலும், நோயிலும், பசியிலும், வாடி வதங்கி எலும்பும் தோலுமாய் நடமாடும் பிரேதங்களாக இருக்கிறார்களே இந்த அவல நிலையை ஆண்டவன் ஒப்புக்கொள்ளுகிறாரா? ஒரு சிலரை பணக்காரர்களாகவும், மிகப்பலரை ஏழைகளாகவும் காலமெல்லாம் வைத்திருக்கும் அதிகாரத்தை ஆண்டவனுக்குத் தந்தவன் யார்? விதி என்பீர்களாயின் அதன்படியே நடக்கட்டும் என்று அனுமதித்த கயவன் யார்? உழைத்த மக்களைப் பட்டினிபோட்டு, உழைக்காத சோம்பேறிகளை உயர்த்தி உப் பரிகையிலே வாழவைத்த உலுத்தன் யார்? ஏன் இந்த நிலை என்று கேட்டால் பாஸ்டிலி என்ற பயங்கர சிறையைக் காட்டுவதா? இன்றில்லையாயினும் நாளை, நாளையில்லை யாயினும் மற்றோர் நாள், என் கண் முன்னாலேயோ நான் கண் மூடிய பிறகோ இந்தச் சிறை தூள் தூளாகும் பாருங்கள்” என்று பாருக்கு உணர்த்திவிட்டு அவன் கண் மூடிய பத்தாவது ஆண்டு, வெடிகுண்டு வைத்துக் தகர்க்கப்பட்டு, உள்ளே குற்றவாளிகள் என்ற பட்டதோடு சென்றவர்கள், சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகம் வாழ்க! வாழ்க ரூசோ!! ஒழிக லூயி! என்ற கோஷத்கோடு வெளியே வந்தனர். ரூசோவே நேரடியாக நின்று இந்தப் போர் நடத்தவில்லை என்பது உண்மைதான். ஆனால் அவன் எழுத்துக்கள் உயிர்பெற்று இராணுவ உடையில் சென்று பாஸ்டிலி மேல் படையெடுத்து இடித்துத் தள்ளியது.

ரூசோவின் இளமை அவ்வளவு சுவையுள்ளதாகவோ, மேன்மை பொருந்தியதாகவோ, பெண்களிடத்தில் நடந்து கொள்ள வேண்டிய இங்கிதம் நிறைந்ததாகவோ, சிறந்த படிப்பாளி என்று சொல்லத் தக்க அளவிலோ இருந்ததில்லை. எந்த சீமாட்டியாவது இவனை விருந்துக்கழைத்தால், உணவை