பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேனா வீரர்கள்

65

கிரேக்க ரோமானிய வரலாறுகளைப் படிக்கத் தொடங்கி அவற்றிலேயே ஆழ்ந்துவிட்டார். அவரை மிகக் கவர்ந்த வரலாறு (Plutarch) புளுடார்ச் எழுதிய வாழ்க்கை வரலாறு என்பதுதான்.

ரூசோவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

அவருடைய தந்தை உயிரோடிருந்தபோது, அவருக்கும் ஒரு கப்பல் தலைவனுக்கும் ஏற்பட்ட கை கலப்பில், தன்னை வாள்கொண்டு தாக்கியதாகக் கப்பல் தலைவன் காதியர் வழக்கு தொடர்ந்திருந்தான். (குறிப்பு அப்போதிருந்த பிரெஞ்சு சட்டப்படி குற்றம் சாட்டியவர், குற்றம் சாட்டப்பட்டவர் இருவரையுமே வழக்கு முடியும் வரையில் சிறையில் வைக்க வேண்டும்.) ஆனால் கப்பல் தலைவனை சிறையில் வைக்க முடியாது என்று ஏதோ சாக்குப் போக்கு சொல்லிற்று அரசு. ஆனால் ஐசக் ரூசோ, அவனைச் சிறையிலே தள்ளுகிற வரையில் தான் சிறைக்குப் போக முடியாதென்று வெளியூருக்குத் தப்பி ஓடிவிட்டான். போன ஊரிலே இருந்துவிட்டான். அதற்குப் பிறகு ரூசோ படித்து வேலை தேடும் படலம் தொடங்கி, உலோக இயந்திர வேலைகளில் கொஞ்சம் கை தேர்ந்து டுக்கோமன் (Ducoman) என்பவனிடம் வேலைக்கமர்ந்தான். அவன் இவனை மிகக் கொடுமையாக நடத்தினான். திட்டுவான், அடிப்பான். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது உதைத்து வெளியே விரட்டி விடுவான். ஜெனிவா நகரத்தைவிட்டு எங்காவது ஓடிவிட்டால்தான் நிம்மதி ஏற்படும் என்று நினைத்து, இரண்டு முறை நகரத்தைக் கடக்க எண்ணி தோல்வி கண்டான். கடைசியில் நண்பன் ஒருவன் சில பொருள்களையும், கொஞ்சம் பணத்தையும், ஒரு வாளையும் கொடுத்தனுப்பினான். மூன்றாவது முறை எப்படியோ நகரத்தைவிட்டு வெளியே வந்துவிட்டான். வழியில் நண்பன் கொடுத்த பணமும் செலவாகி, பொருள்கள் ஒவ்வொன்றையும் விற்று அதுவும் தீர்ந்து போய் கடைசியில் வாளையும் விற்று, அதுவும் தீர்ந்துபோய் பசியால் பாரிஸ் நகரத் தெருக்களிலே திரியவேண்டியதாயிற்று.

பிறகு சேவாய் நகரையடைந்து, பாண்ட்வீர் என்ற