பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேனா வீரர்கள்

67


இது மிக சாதாரண தலைப்புதான், எனினும், சமூதாயத்தின் அடிப்படையையே தொடும் பண்பு ஒன்று இதில் அடங்கியிருப்பதாக ரூசோவுக்கு பட்டது. பலர் எழுதினார்கள் என்றாலும் ரூசோதான் அந்தப் பரிசைப் பெற்றார். ரூசோ அந்தப் பரிசைப் பெற்ற பிறகுதான் அவர் எழுதிய மற்ற நூல்களை மக்கள் படித்து, அதுவரை அவர்கள் கொண்டிருந்த அரச பக்தியைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ளவும்-மன்னர்கள், மன்னர் பரம்பரையினர், மத குருமார்கள், பிரபுக்கள் அனைவரும், மக்கள் தாக்குதலுக்கும் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார்கள். அப்படித் தாக்கியவர்களில் குறிப்பிடவேண்டிய மன்னன் ஒருவன்.

கிராமத்து ஜோசியன் என்ற ஒரு நாடகத்தையும், சிங்காரக் கலை வாணிகள் என்ற நாடகம் ஒன்றையும் வெளியிட்டுத் தன் புகழை மேலும் உயர்த்திக் கொண்டார். டி ஜோன் கலைக்கழகம் மற்றோர் கட்டுரைப் போட்டியை வெளியிட்டிருந்தது. மனிதகுலத்தின் ஏற்றத் தாழ்வுகள் என்பதே அதன் தலைப்பு. அதில் ரூசோ வெற்றி பெறவில்லை. எபினே சீமாட்டிக்குச் சொந்தமான ஒரு கானகத்தில் குடிசை அமைத்து, அதை ஆசிரமம் Hermitage என்றே அழைத்தார். பிறகு பல நாடுகளில் இயங்கும் அரசியல் முறைகளைப் பற்றி அரசியல் அமைப்புகள் என்ற நூலையும், வரலாற்றுப் படிப்பினைகள் என்ற நூலையும் எழுதி முடித்தார். மற்றாென்று ஜூலி என்பதாகும்.

இவருடைய புரட்சிகரமான எழுத்துக்களால் பெர்ன் நகரம் இவரை உடனே ஊரைவிட்டே வெளியேறுமாறு கட்டளையிட்டது எத்தனையோ புரட்சியாளருக்குப் புகலிடம் அளித்த பெர்ன் நகரம், தன்னைமட்டிலும் வெளியேற்ற நினைப்பது ஏன் என்று ருசோவுக்குப் புரியவில்லை. இருந்தாலும் வெளியேற வேண்டிய கட்டாயம் வந்துவிட்டதால் அடுத்து பிரஷ்யா நாட்டு எல்லையிலே உள்ள மொத்தையாஸ் என்ற கிராமத்தில் தன் மகனுக்குச் சொந்தமான வீடொன்றில் தங்குமாறு ஒரு சீமாட்டி கேட்டுக்கொண்டாள். எனினும் அந்த