பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

புரட்சி செய்த

லாம் கண்ணீர்விட்ட மக்களுக்குச் சுதந்தர ஜோதியைக்காட்டி ஆர்ப்பரிக்க, கடலில் அரிமா ஒன்று தோன்றியதைப் போல் தோன்றி குளிர்தத்த தேவனே வருக! வருக! கடவுளைக் கருணை என்றனர். அதை நம்பாதவனுக்கு மரணமென்றனர். கடவுளுக்குக் கருணையுமில்லை. நம்பாதவனுக்கு மரணமுமில்லை. தரணியை ஆளப் பிறந்தவர்கள் மக்கள். தார் வேந்தனை வழியனுப்புங்கள் என்றும், மரணம் வருமே என்றும் அஞ்சாமல் மார்தட்டிச் சொன்ன மன்பதையின் பாதுகாவலனே வருக! வருக! என்று வாழ்த்தி வரவேற்றனர் மக்கள். எந்த பேரறினான் ரூசோவால் எழுதப்பட்ட ‘சமுதாய ஒப்பந்தம்’ என்ற நூலும், எமிலி என்ற நூலும், பிரஞ்சு அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டு, பாரீஸ் நகர உயர்நீதி மன்றத்தின் முன்னால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதோ, அதே நேரம் இங்கிலாந்தின் தலைநகரில் அந்த இரண்டு நூல்களையும் சாம்பிராணியில் காட்டி கண்களில் இந்திக்கொண்டு, அவற்றை எழுதிய ரூசோவின் கைகளை முத்தமிட்டனர். “காலத்தின்மேல் குற்றமில்லை. மக்கள் மனோ நிலைதான் காரணம்” என்று அறிஞன் ஷேக்ஸ்பியர் சொன்னபடி நமது நினைப்பே காலத்தின் நிலைக்களனாய் அமைந்துவிடுகிறது. இதைக் கண்ட பிரான்சு, அவரை அழைத்துச் சிறப்பிக்கலாமா என்றெண்ணியது. ரூசோவின் மனதில் விழுந்த பழைய வடு மறையவே இல்லை. அவர் திரும்பி வரவுமில்லை. இப்படி அண்டத்தையே கலக்கிய பேருருவம் 778 ம் ஆண்டு ஜூலை இரண்டாம் நாள், முகமெல்லாம் வீங்கி, தன் அறையில் மாண்டு கிடந்தார். அவர் மரணத்திற்கு உண்மையான காரணம் மறைக்கப்பட்டு, இயற்கையான மரணம் அல்லது கொல்லப்பட்டாரா என்ற உண்மையை சொல்லமுடியாமல் மருத்துவர்களையும் ஊமைகளாக்கி விட்டனர். ரூசோ மறையவில்லை.

அவர் உலகுக்களித்த விலைமதிக்க முடியாத சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகம் என்ற உரிமைக் குரலில் நட மாடிக்கொண்டிருக்கிறது.