பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. வால்டேர்

‘எனக்கு இரண்டு முட்டாள்கள் பிறந்திருக்கிறார்கள். ஒருவன் வசன முட்டாள். மற்றாெருவன் கவிதை முட்டாள். அவர்களை எப்படியாவது திருத்துங்களேன்’ என்று தன் நண்பர் களைக் கேட்டுக்கொண்டவரின் இரு மக்களில் இளையவன்தான் surrow(31–st. gyari ush@uuri Francois Marie Arouet arsiru தாகும். எண்பத்திநான்கு ஆண்டுகள் வாழ்ந்து, தான் வாழ்ந்த நூற்றாண்டுக்குப் புதியதோர் எழுச்சியைத் தந்தவர். மன்னதி மன்னர்களெல்லாம் வால்டேர் என்ற பெருமகனைக் கண்டு, அவர் திருவடிகளைத் தொட்டு கண்களிலே ஒத்திக்கொண்டால் மோட்சம் என்ற நிலையில், நாள் கணக்காக அவர் இல்லத்தின் வெளியே காத்துக்கிடந்தார்கள்.பிரடரிக் என்ற மன்னன் மாறு வேடமணிந்து வந்து அவரைக் கண்டு சென்றதுமான அத்தனை சிறப்புக்களைப் பெற்ற வால்டேரைப் பற்றி, அவர் பிறந்த போது என்ன கூறிஞர்கள். இந்தக் குழந்தை ஒருநாளேக்குமேல் உயிரோடு இருக்காது. அவ்வளவு நோஞ்சாகை எலும்பும் தோலுமாய் இருந்த குழந்தைதான் 84 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த பெரியார் வால்டேர்.அவர் பாரிஸ் நகரத்தில் 1694ம் ஆண்டு நவம்பர் திங்கள் 21ம் நாள் பிறந்தார். சிறந்த செல்வந் தரின் குடும்பத்தில் பிறந்தவர். ஒரே ஒரு அண்ணன். அவர் பெயர் ஆர்மண்ட் (Armand) அவர் ஜேன்சனிசம் என்ற மத சீர்திருத்த இயக்கத்தில் சேர்ந்து அதன் கருத்துக்களே எழுதிக்