பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

புரட்சி செய்த

ஏராளமான பணமும் புகழும் சேர்ந்தது. மக்களேகூட அவர் நாடகத்தில் வரும் சில உரையாடல்களை மறந்துவிடா வண்ணம் ஏதாவதொன்றில் குறித்து வைத்துக்கொண்டனர். பணக்காரரான பிறகு, பிறருக்கு உதவ அவர் எப்போதும் தயங்கியதே இல்லை. பிறருக்குக் கொடுத்த கையைப் பார்த்து சிரித்துக்கொள்வார். ஒருவன் ஏழ்மையில் இருக்கக்கூடாது என்பதற்கு அவர் கீழ்வருமாறு காரணம் கூறுகிறார்.

“ஒருவன் தன்னை ஏழ்மையிலிருந்து மீட்டுக்கொண்டால் தான் அவனுக்கு மன நிம்மதி கிடைக்கும். மன நிம்மதியில்லாவிடில் அறிவு வேலை செய்யாது. அறிவு வேலை செய்யாவிடில் அவனால் உலகிற்குப் புதிய தத்துவங்கள் எதையும் தரமுடியாது.” பிரஞ்சு அரசாங்கத்தை நேரடியாகத் தாக்குவதை விடுத்து பெர்ஷியா, கிரீஸ், பெருசைனா, போர்னியோ, முதலான நாடுகளின் நடவடிக்கைகளை விமர்சித்து எழுதியிருந்தாலும், பிரெஞ்சு நாட்டு நடவடிக்கைகளையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது அவரது பேனா.

இப்படி இவரால் எழுதப்பட்டு, சில நாடகங்கள் இவராலேயே நடிக்கப்பட்டு, அவற்றைப் பார்த்து பைத்தியங்களாய் விட்ட பிரபுக்கள் முதல் பாமரர்வரை எங்கும் இவரது கருத்துக்கள் பரவிவிருந்த நேரம் அது. அப்போது பிரெஞ்சு நாட்டின் நிலை என்ன என்பதைப் பார்ப்போம். அவரது நாடகத்தைப் பார்த்து ரசித்த மதகுருமார்கள் நாடக நடிகன் என்றால் வெறுத்தார்கள். அவர்களுக்குச் சமுதாயத்தில் ஒரு அந்தஸ்தும் தரப்படவில்லை. ஒருவன் நாடகத் தொழிலை விட்டுவிட்டேன் என்று சொன்னாலன்றி அவனைப் புதைக்க, கல்லறையில் இடம் தருவதில்லை; மத சடங்குகளும் இல்லை.

வால்டேரின் மனத்தைப் புண்ணாக்கிய கோரக் காட்சி

பிரெஞ்சு நாட்டின் புகழ்வாய்ந்த நடிகை ஏட்ரியன் லெக் ரூவியா என்பவள். நோய்வாய்ப்பட்டு மரணப் படுக்கையிலே கிடக்கிறாள். அருகில் வால்டேர் நின்று கண்ணீர் உகுத்துக்