பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேனா வீரர்கள்

81

வைக்கின்றார். ஆட்சியாளர்களின் மடமையை அம்பலப்படுத்துகிறார். அவர் எழுதிய நூல்கள் எல்லாவற்றினுள்ளும் இது தான் மிகபெரியது. (The most ambitious, the most voluminous, the most characteric and the most daring tallentyre). கிப்பன் (Gibbon), நீபர் (Niebuhar), பக்கிள் (Buckle), கிரோட் (Crote) ஆகிய புகழ்பெற்ற சரித்திர ஆசிரியர்கள் வால்டேரை பின்பற்றியே தமது நூல்களை எழுதினார்கள். வால்டேரை காண்பதற்கு பாஸ்வெல் (Boswell) கிப்பன் (Gibbon), டி.ஆலம்பர்ட் (D. Alembart), ஹெல்விடஸ் (Helvetius) போன்றவர்கள் அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்தனர். அவர் சேர்த்த பணத்தையெல்லாம் கேட்டவர்களுக்கெல்லாம் வாரி வழ்ங்கினார்.

இதற்கிடையில் அதே பிரான்சில் டிரைபஸ் வழக்கு சம்மந்தமாக எமிலிஜோலாவுக்கு ஏற்பட்டதைப் போன்ற பொறுப்பு ஒன்று வால்டேர் மேல் விழுந்தது. பார்தலோமியா படுகொலையின் இருநூறாவது ஆண்டு விழா, 1762ல் கத்தோலிகர்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஜீன் கலாஸ் (Jean Calas) என்ற புராடெஸ்டன்ட் ஒருவன், கத்தோலிக்க மார்க்கத்தில் சேரவிருந்த தன் மனைவியை கொலை செய்துவிட்டான். இந்நிகழ்ச்சி வழக்கு மன்றம் வந்தது.

அப்போதைய நீதியின் கதியைப் பாருங்கள். பல தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டு முடிவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு மரணத்தை முத்தமிட்டான். அவனுக்காக வாதாட யாரும் முன்வரவில்லையா என்று கேட்கத்தோன்றும். “அங்கே இயற்றப்பட்ட கிரிமினல் சட்டம் நீதி வழங்குவதற்காக ஏற்பட்டதல்ல, நீதியைச் சாகடித்து, அநீதியை நிலை நாட்டவே இயற்றப்பட்டது”, என்று வாதாடினார் வால்டேர். ஜூரிகளுக்கு இடம் கிடையாது. குற்றம் சாட்டப்பட்டவன் வழக்கறிஞர்களை வைத்து வாதாட முடியாது. அவன் தனக்குச் சாதகமான சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாது. குற்றவாளிக் கூண்டில் நிற்பவனுக்கு எதிர் தரப்பில்