பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

புரட்சி செய்தி

நிற்பவனை குறுக்குக் கேள்விகள் கேட்கக் கூடாது. ஆட்சியாளர்களுக்கும், பிரபுகளுக்கும் மட்டிலும் விதிவிலக்கு. இப்போதுதான் மதத்துக்கெதிராக பலத்த குரலெழுப்பினார். அவர் குரல் நாடு பூராவிலும் எதிரொலித்தது.

“அழித்தொழியுங்கள் இத்தீமையை (Ecrasez Linfame Crush the vile things) தான் தொடங்கவிருக்கும் போரிலே கலந்து கொள்ளுமாறு: “வாருங்கள், தீரரான டிடாரெட் அவர்களே! அஞ்சாநெஞ்சரான டி-ஆலம்பர்ட் அவர்களே, மதவெறியர்களையும், துன்மார்க்கர்களையும் அழித்தொழியுங்கள். அறிவுள்ளவர்களை அறிவீனர்கள் அடிமைப்படுத்த அனுமதியாதீர். எதிர்கால சந்ததியார் தாம் அனுபவிக்கும் பகுத்தறிவையும், சுதந்திரத்தையும் நாமே அவர்களுக்கு அளித்தோம் என்பதை அவர்கள் உணரட்டும்.

டிரைபசுக்காக வாதாடி வெற்றிபெற்ற எமிலி ஜோலாவுக்கும், ஜீன்கலாசுக்காக வாதாடி வெற்றிபெற்ற வால்டேருக்கும் ஒரு வித்தியாசம். டிரைபசை மீட்டு ஹில்ஸ் தீவிலிருந்து கொண்டுவரப்பட்ட போது எம்லி ஜோலா உயிரோடில்லை, வால்டேர் வாதத்தால் ஜீன் கலாஸ் (Jean callas) குற்றமற்றவன் என்று நிருபிக்கப்பட்ட போது ஜீன் கலாஸ் உயிரோடில்லை.

“Come brave Diderot, intrepid D’ Alembert, ally yourselves. Overwhelm the fanatics and the knaves, destroy the insipid declamations, the miserable sophi, stries, the lying history—the absurdities without number. do not let those who have sense be subjected to those; who have none, and the generation which is being born will owe to us its reason and liberty”.

கலாஸ் வழக்கு முடிந்தது, வால்டேர் வெற்றி பெற்றார். அவர் எழுதிய சிறு நூல்கள் ஒரே நேரத்தில் 3 லட்சத்துக்கு மேல் விற்றிருக்கிறது. அப்போது வால்டேருக்கு வயது எண்பத்தி மூன்று.