3. பிரான்ஸிஸ் பேகன்
நீதியா? நட்பா? நீதியை நோக்கினல் நட்பில்லை. நட்பை நினைத்தால் நீதியில்லை. இந்தத் தத்துவத்தை அறிஞன் பேகன் வாழ்க்கை நெடுகிலும் காணலாம். எந்த எஸ்ஸெக்ஸ் (Earl of Essex) பிரபு தன்னை கடைசி வரையிலும் ஆதரித்தானே, தனது ஏற்றத் தாழ்வுகளில் எந்த எஸ்செக்ஸ் அக்கறை காட் டிஞனே, ஒரு போரை நடத்த கப்பலில் காலடி வைக்கும் போது கூட தன் நண்பர்களிடம் பேகனை கவனித்துக் கொள் ளுங்கள் என்று கேட்டுக்கொண்டு போர்க்களம் புறப்பட் டானே, தான் மணக்க சம்மதிக்காத எலிசபெத் அரசிக்கும் எஸ்செக்சுக்கும் கணக்கற்ற முறையில் சமாதானம் செய்து வைக்க எவன் முயன்றானே, தனது ஏழ்மை நிலையறிந்து தனக்கு சொந்தமான விலையுயர்ந்த எஸ்டேட் ஒன்றை பேகனுக்கு எவன் ஒருவன் பரிசாக அளித்தானே, தனது பணம், பலம், அந்தஸ்து, செல்வாக்கு அவ்வளவையும் செலவிட்டு அட்டர்னி ஜெனரல் பதவியையோ,அதற்கடுத்தாற் போலிருந்த சொலி சிட்டர் ஜெனரல் (Solicitor General) பதவியையும் வாங்கித் தரமுடியாத சூழ்நிலையால் மேற்சொன்ன தன் எஸ்டேட்டை இனமாக வழங்கினனே, அதே எஸ்செக்ஸ் என்ற பிரபுவை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி விசாரித்தான் பேகன், என்பதைப் படிக்கும்போது நமக்கே கூட ஒரு அதிர்ச்சி ஏற்படுகிறதல் லவா? இதல்ை அவனே நன்றிகெட்ட நயவஞ்சகன் என்றனர்