பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேனா வீரர்கள்

85

சிலர். நீதிமான் என்றனர் பலர். ஆனால் பேகனுக்குத் தாங்க முடியாத மனவேதனை ஏற்பட்டுவிட்டது. இருந்தாலும் சூழ்நிலைகள், பேகனை அந்த இக்கட்டான மூலையில் தள்ளி விட்டது.

இந்தச் சமயம்தான், இப்போது நிலைத்த புகழ்பெற்று விளங்கும் இவனது கட்டுரைகள் (Essays) 1957ல் வெளியிடப்பட்டன. இந்தக் கட்டுரைகள் சிந்தனையைத் தூண்டிவிடும் நூல். ஷேக்ஸ்பியர், ஜான்சன், மார்லோ, போன்ஜரின் நாடகங்களும், ஸ்பென்சர், சிட்னி போன்றோரின் கவிதைகளும் வசனங்களும் இங்கிலாந்தில் புகழோடு நடமாடிக்கொண்டிருந்த காலம் அது.

1583ல் டாண்டன் தொகுதியிலேயிருந்து பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கே இவர் நடத்திய விவாதங்களும், சொற்பொழிகளும் மிகப்புகழ் வாய்ந்தவை. இன்றும் இவை அழியாத இலக்கியங்களாகப் போற்றப்படுகின்றன.

மிகப் பெரிய இலக்கிய கர்த்தாவான பென்ஜான்சன், பேகனுடைய பேச்சுக்களைப் பற்றி கூறியிருப்பதைக் கேட்போம்:-

“என்னுடைய காலத்திலே நான் கண்ட கண்ணியமான பேச்சாளர் பேகன், அவருடைய பேச்சிலே ஆழ்ந்த விருப்பம் காணப்பட்டது. அவருடைய பேச்சின் ஒவ்வொரு பகுதியிலும் அழகைக் கண்டதுபோல் நான் மற்றெவர் பேச்சிலும் கண்டதில்லை. பேகன் பாராளுமன்றத்தில் பேசிய பேச்சுக்களைவிட, நீதிமன்றத்தில் அவர் வாதாடிய விதம் மற்ற வழக்கறிஞர்களுக்கு வழி காட்டியாயமைந்தன. அவருக்குப் முன் 150 ஆண்டுகள் அப்படி பேசியவர்களைக் கண்டதில்லை என்றனர். தன்னுடைய பேச்சில் பிறரை லயிக்க வைத்து கட்டுப்படுத்திவிடும் சக்தி, அவருகிருந்ததைப் போல் வேறு எவருக்கும் இருந்ததில்லை. இதைக் கண்ட பர்லி பிரபுவும் மற்றவர்களும் இவருடைய செல்வாக்கைக் குறைத்துவிட