பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை

சிந்தனைச் சிற்பி சி. பி. சிற்றரசு அவர்கள் சிறந்த எழுத் தாளர்; சீரிய சொற்பொழிவாளர்: நேரிய அரசியல்வாதி; பழுத்த பட்டறிவாளர்: நல்ல நகைச்சுவையாளர்; வீரமிக்க அறப்போர் வீரர் : பாராட்டுக்குரிய பண்பாளர்; துணிவு மிக்க நிருவாகத் திறமையாளர்; இனிய நண்பர்.

இப்படிப்பட்ட பண்புகள் பலவும் நிரம்பிய நண்பர் சி. பி. சிற்றரசு அவர்களின் சிந்தனையிலிருந்து முகிழ்ந்த சிறந்த சிந்தனைக்கட்டுரைகளைத் தொகுத்துத்தரும் சிரிய பணியினைப் பூம்புகார் வெளியீட்டாளர்கள் மிகச் சிறப்பாகச் செய்துள்ளார்கள்.

சிந்தனைச் சிற்பி சி.பி. சிற்றரசு அவர்கள், சிந்தனையைத் தூண்டக்கூடிய ஏராளமான நூல்களை ஆங்கிலத்திலும், தமிழிலும் நன்கு படித்துத் தேர்ந்தவராவார். சிந்தனையைத் துாண்டும் பேச்சுக்களைப் பேசுவதிலும், கட்டுரைகளை எழுது வதிலும் அவர் எப்பொழுதுமே வல்லமைபெற்று விளங் கினர்.

சிந்தனைச்சிற்பியின் எழுத்தோவியம் இனிமையாகவும், எளிமையாகவும், அழகாகவும், அருமையாகவும், சுவை நிரம்பியதாகவும், பொருள் பொதிந்ததாகவும், உணர்ச்சி மிக்கதாகவும், எழுச்சிபயப்பதாகவும் விளங்கும், அவர் எதையும் தெளிவாகவும் சொல்லுவார்; துணிவோடும் சொல்லுவார்; திட்பமாகவும் சொல்லுவார்.

சமயங்களைப் போற்றுபவராளுலும், புறக்கணிப்பவரா ஞலும், எதிர்ப்பவரானலும் அவற்றைப் பற்றித் தெளி வாகத் தெரிந்து கொள்ளவேண்டியது இன்றியமையாத தாகும். சிந்தனைச் சிற்பி அவர்கள் இந்துசமயம் - சமண