பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேஞ வீரர்கள் 89

அன்றாட லோகாதயப் பிரச்சினைகளில் நூலறிவைக் கொண்டே முடிவுக்கு வருவதென்பது மெத்தப் படித்தவர் களின் பைத்தியக்காரத்தனமான கூறும் இயல்பு ஆகும். கற்றல் நம் இயற்கையைப் பக்குவப்படுத்துகின்றது. நாம் கற்றதை உலக அனுபவம் பக்குவப்படுத்தவேண்டும். தந்திரசாவிகள் நூலறிவை வெறுத்து ஒதுக்குகின்றனர்; சாதாரண பாமர மக்கள் அதை வியந்து பாராட்டுகின்றனர்; விவேகிகள் அதைப் பாராட்டுகின்றனர். பிறர் கூறுவதை மறுப்பதற்காகவும் அவர்களைத் திக்குமுக்காடச் செய்வதற் காகவும் படிக்கவேண்டாம்; ஆம்’ என்று கூறி எதையும் அப்படியே ஒப்புக்கொள்வதற்காகப் படிக்கவேண்டாம், பேச் சுக்கும் உரை நிகழ்த்துவதற்கும் உபயோகப்படும் என நினைத் துப் படிக்கவேண்டாம்; எதையும் எடைபோட்டுப் பார்த்துச் சிந்திப்பதை நோக்கமாகக் கொண்டே படிக்க வேண்டும். சில புத்தகங்களைச் சுவைத்துப் படித்தாலே போதும். சிலவற்றில் உள்ள கருத்துக்களை அப்படியே விழுங்கிவிடவேண்டும். சில புத்தகங்களின் கருத்துக்களை நன்கு மனத்தாற் திரும்பத் திரும்பச் சிந்தித்து அசைபோட்டு நம் அறிவிலே செறிக்கச் செய்யவேண்டும்,’

...Studies serve for delight, for ornament, and for ability; Their chief use for delight, is in privateness and retiring; for ornament, is in discourse; and for ability is in the judgment and disposition of business, .....; To spend too much time in studies, is sloth; to use them too much for ornament, is affectation; to make judgment wholly by their rules, is the humour of a scholar; they perfect nature, and are perfected by experience;...Read not to contradict and confute, nor to believe and take for granted, no to find talk and discourse, but to weigh and consider some books are to be tasted, others to be swallowed. and some few to be chewed and digested; ... .......'OF STUDIES’

i0.2 6