பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

புரட்சி செய்த


பேகனுடைய எழுத்தாற்றலைப் பற்றி அறிந்தோம். இனி அவரது வாழ்க்கைக்கு வருவோம். எஸ்செக்ஸ் பிரபு மதிக்கத் தகுந்தவராயினும் அவர் அலட்சியம் செய்வதும் பழிவாங்குவதுமாகவே இருந்தார். எலிசபெத்தை தான் காதலிக்காமல் விட்டதற்காக அவர்மீது கோபம் இருந்தது. எஸ்செக்ஸ் மிக துணிச்சல்காரர் என்பதும் மக்களுக்குத் தெரியும். இந்தப் பிரபுவை எப்படியாவது பழி தீர்த்துவிட வேண்டுமென்று எலிசபெத் திட்டமிட்டிருந்தாள். தான் வலிய காதலித்தும் வெறுக்கிறானே என்ற கோபம் அவளுக்கு.

இந்த நிலையில் நினைத்தபோதெல்லாம் தனக்கு உதவி செய்துவரும் எஸ்ஸெக்ஸ் பிரபுவுக்கு அடிக்கடி தொல்லை கொடுக்க மனமில்லாமல், எந்தச் சீமாட்டியையாவது திருமணம் செய்துகொண்டால், அவள் கொண்டுவரும் சீதனத்தின் மூலம் நிம்மதியாக வாழலாம் என்று திட்டம் தீட்டிய பேகன் கண்களுக்கு, ஹாட்டன் என்ற ஒரு கிராதக விதவையைத் தவிர வேறு யாரும் புலப்படவில்லை. ஆனால் அவள் பேய்க்குணம் படைத்தவள் மட்டிலுமல்ல, அரைப் பைத்தியமும் கூட, யாரையும் சத்தம் போட்டு அடக்கி ஒடுக்கிவிடுவாள். எப்படியோ அந்தத் திட்டம் மாறி எட்வர்ட் கோக் (Edward Coke) என்பவரை மணந்துகொண்டு அவருடைய வாழ்க்கையை சிதறடித்து சின்னாபின்னமாக்கி விட்டாள்.

எஸ்ஸெக்ஸ் பிரபு எப்படியாவது எலிசபெத்தை அடக்கி விட்டு, அல்லது சிறையிலடைத்துவிட்டு அவருக்குப் பதிலாக ஒரு வாரிசை நியமிக்க வேண்டுமென்ற சதித்திட்டத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார். இதை அறிந்த பேகன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். நட்பைவிட நாட்டையும் சட்டங்களையும் மதிக்கவேண்டிவரும் என்பதையும் எஸ்ஸெக்ஸ் பிரபுவுக்குக் கடைசியாக உணர்த்தி விட்டார். பேகனுடைய இப்தப் புத்திமதி மடத்தனமாகவும் கோழைத்தனமாகவும் பட்டது. எஸ்ஸெக்ஸ் பிரபுவின் முதல் திட்டமே தோல்வியடைந்து கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். பேகன், எலிசபெத்திடம் எவ்வளவோ மன்றாடி எஸ்ஸெக்சுக்கு