பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேனா வீரர்கள்

93

“சூழ்ச்சி, பொய், முகஸ்தி, பாவனை இவை நான்கில் ஏதாவதொன்றில்லாதவர்கள் ஆட்சியாளர்கள் மத்தியிலோ, அவர்களைச் சுற்றியோ இடம் பெற முடியாது.”

பேகனுக்கு எதிர்ப்புக்கள் நாளுக்கு நாள் வளர்ந்த வண்ணமிருந்தன. அதற்கேற்றாற் போல ஒரு சிக்கல் முளைத்தது. அக்காலத்தில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் நீதிபதிகளாக இருப்பவர்கள் பொது மக்களிடம் எந்தச் சன்மானமும் பெறக் கூடாதென்ற பொது விதி ஒன்றிருந்தது. அப்படியும் பலர் வாங்கிக்கொண்டிருந்தனர். பேகனும் சிலவற்றை வாங்கியிருந்தார். அதைப் பெரிதாக்கி, கொடுக்காததையெல்லாம் கொடுத்ததாகக் கதைகட்டிவிட்டனர். என்றாலும் பொது மக்கள் கருத்து, பேகனைப் போன்ற பெரிய அறிஞர்கள் இத்தகைய செயலைச் செய்திருக்கக் கூடாதென்பதுதான். அதனால் அவர்மேல் வழக்கு தொடரப்பட்டு அது நிரூபிக்கப்பட்டு, அவர் காலம் வரையில் அவர் நீதிமன்றங்களின் சுவர்களின் பக்கமே எட்டிப்பார்க்கக் கூடாதென்றும், ஆயுட்கால தண்டனையும், 40,000 பவுன் அபராதமும் விதிக்கப்பட்டது. பாராளுமன்றத்திடம் மன்னிப்பு கேட்டார். தரப்படவில்லை.

ஆனால் ஜேம்ஸ் மன்னன் பேகனை இரண்டு நாட்கள் காவலில் வைத்திருந்து பிறகு விடுவித்து, அபராதத் தொகை 40,000 பவுன்களையும் தானே கட்டிவிட்டான். மனமுடைந்து போன பேகன், 1626ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு நாள் லண்டனிலிருந்த ஹைகேட் (High Gate) என்ற இடத்திற்கு சவாரி செய்து கொண்டு போகும்போது, விஞ்ஞான பிரச்னை ஒன்றில் தீவிரமாகத் தன் கவனத்தை வைத்துக்கொண்டு சென்றார். பனிக்கட்டியினுள் திணித்து வைக்கப்பட்ட மாமிசம் எந்த அளவுக்குக் கெட்டுப்போகாமல் இருக்கும் என்பதுவே அப்பிரச்னை. அதை சோதனை செய்து பார்த்து, விட வேண்டுமென்ற ஆவல் தூண்டியது. பக்கத்தில் உள்ள குடிசையில் ஒரு கோழியை வாங்கி அதை உடனே கொன்று, பனிக்கட்டியை இரு கரங்களாலும் எடுத்து அதைச் சுற்றி