பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேனா வீரர்கள்

95

விட்டான். பேகனுடைய அறிவாற்றலைக் கண்டு அவனுடைய உறவினர்கள் மகிழ்ச்சி கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக பொறாமைப்பட்டார்கள், பன்னிரண்டு வயதான போது பேகனை டிரிடினிடி கல்லூரியில் சேர்த்தார்கள். அங்கே சொல்லித்தரப்பட்ட முறை பேகனுக்கு அறவே பிடிக்கவில்லை. அரிஸ்டாட்டலின் தத்துவங்கள் எதுவும் அவருக்குப் பிடிக்கவில்லை. ஆகவே அந்தக் கல்லூரியிலிருந்து விலகிவிட்டார்.

பதினாறு வயது ஆவதற்குள்ளாகவே பிரான்சு நாட்டிலிருந்த இங்கிலாந்து தூதுவராலயத்தின் ஒரு நல்லபதவியை ஏற்குமாறு அழைப்பு வந்தது. காரணம் அவர் தந்தையின் செல்வாக்கு அந்த அளவுக்கு வளர்ந்திருந்த காலம். அந்தப் பதவியை வேறு வழியில்லாமல் அறைகுறை மனதோடு ஒப்புக் கொண்டார். இதைப்பற்றி இயற்கையின் விளக்கம் ‘The Inter pretation of Nature’ என்ற நூலில் விளக்கியிருக்கிறார்.

அதை மிக உருக்கமாக கூறியிருக்கிறார். அதன் சுருக்கம் வருமாறு:

“மனித குலத்தின் சேவைக்காகவே நான் பிறந்திருக்கிறேன் என்று மனதார நம்பினேன். மனித சமுதாயற்திற்கு மிக அதிகமான நன்மை பயப்பது எதுவென ஆராய்ந்தேன். அவனை மனிதனாக வாழவைப்பது அறிவின் எல்லைகள் தாம் என்பதை உணர்ந்தேன். தற்போதைய மனித சமுதாயத்தின் அறிவெல்லைகளை விளக்கப்படுவதுடன், மனித வாழ்வைச் சூழ்ந்துள்ள ஆத்மீக அந்தகாரத்தை எவன் அகற்றுகின்றானோ, அவன் மனித சுதந்திரத்தின் மாபெரும் காப்பாளனாகிறான். புவனத்தின்மேல் மனிதனுக்குள்ள ஆதீனத்தை அத்தகையோன் விரிவுபடுத்துகிறான். இப்பணிக்கு என்னுடைய இயல்பும் மனோ நிலையும் ஏற்றதாக இருந்ததை நான் கண்டேன். மெய்மையில் ஈடுபாடுற்று, அதைப்பற்றிச் சிந்திப்பதற்கு உகந்த தாயமைந்திருந்தது என் உள்ளம். அதைப்பற்றி ஆராய்ச்சி செய்வதிலே எனக்கு அளவற்ற மோகம் இருந்தது. தத்துவ