பக்கம்:உலக அரங்கிலே உன்னத நிகழ்ச்சிகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

மும்முறை மணம்!

ர் அமெரிக்கரும், ஈரான் நாட்டைச் சேர்ந்த ஓர் இளவரசியும் லண்டனில் கல்யாணம் செய்து கொண்டனர்.

அவர்கள் ஒரே நாளில் மூன்று தரம் கல்யாணம் கட்டிக் கொண்டார்கள்.

ஈரானில் சந்திப்பு நிகழ்ந்தது.

காதல் பிறந்தது.

ரிஜிஸ்தரார் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் நடந்தது.

பிறகு, மணமகள் மதப்படி, உடை மாற்றிக் கொண்டு பள்ளிவாசலில் திருமணம்:

அப்பால், மணமகன் மதப் பிரகாரம் மாதாகோவிலில் கல்யாணம் நிகழ்ந்தது.

மணமகன் டேவிட் பெல்ஹாம் ஒரு படத் தயாரிப்பாளர்.

மணமகளின் பெயர்: பருச்சி பக்டியாலே!

தாயின் முத்தம்

திருமதி ராஜன் பென்படேலின் கணவர் தென் ஆப்பிரிக்காவில் ஜோஹன்ஸ் பர்க் நகரத்தில் சிற்றுண்டிச்சாலை நடத்துகிறார்.