உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அரங்கிலே உன்னத நிகழ்ச்சிகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

திருமதி படேல் தன் பிறந்த ஊரான பம்பாய்க்கு வந்தார். ராகேஷ் என்ற குழந்தையை ஈன்றாள். ஊருக்குப் புறப்பட்டார்.

"ராகேஷ் தென் ஆப்ரிக்காவில் நுழையக் கூடாது!" என்று நிறவெறிச் சர்க்கார் தடையுத்தரவு பிறப்பித்தது.

"இந்தியர்கள் தான் பெறாத பிள்ளைகளை இங்கே கடத்தி வருகிறார்கள்!” என்று 'சாக்குப் போக்கு' காட்டியது அரசாங்கம். திருமதி படேல் குழந்தையை விட்டு விட்டு தனித்துப் புறப்பட்டார். தென் ஆப்பிரிக்க சர்க்கார் பேரில் வழக்குப் போட்டு வென்றாள்.

விமானத்தில் பறந்து வந்த ராகேஷை நைரேர்பியில் வரவேற்று முத்தமிட்டாள் தாய்.

ஒரு திருத்தம்

ச்சா கேட்ரி என்னும் பிரபலமான நடிகரை ஓர் ஆங்கில வாலிப நாடகாசிரியர் வந்து பார்த்தார். தாம்முன் கூட்டியே அனுப்பி வைத்திருந்த நாடகத்தின் தன்மைப்பற்றிக் கேட்டறிந்து போகவே வந்தார் அவர்.

உங்கள் நடை சற்று செயற்கையாக இருக்கிறது. புரிவது கடினமாக இருந்தது. ஒரு விஷயத்தை உங்கள் உள் மனத்தில் இருத்திக் கொள்ளுங்கள்.