பக்கம்:உலக அரங்கிலே உன்னத நிகழ்ச்சிகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

சிற்பியின் உயிர்.

லகப் புகழ்பெற்ற சிற்பி கார்ஃபூசியர் 1887ல் ஸ்விட்ஸர்லாந்தில் பிறந்தார். மார்ஸெய்ல்ஸில் பல மாடிகள் கொண்ட ஒரு மாபெரும் கட்டடத்தை அமைத்தார். அந்தச் சாதனை மூலம்தான் அவர் உலகப் புகழ் அடைந்தார்.

பாரிஸிலுள்ள ‘யூனெஸ்கோ' கட்டடம் அவருடைய புகழுக்கு மற்றொரு சின்னம்.

ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியா. அமெரிக்கா ஆகிய நாடுகளின் நகர நிர்மாணத்தின் ஆலோசகராக இருந்தவர். அவர். மாஸ்கோவை நல்ல நகரமாகச் செய்ய அவரை 1931 ல் ருஷ்ய அரசாங்கம் அழைத்தது. கார்பூசியார் கடற்கரையிலிருந்து சுமார் ஐம்பது கெஜத் தொலைவில் அவர் கடலில் நீந்திக் கொண்டிருக்கையில், மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரண மடைந்தார்.

1965, ஆகஸ்ட் இறுதியில் அவர் அமரத்துவம் அடைந்தார்!

பாங்குப் பிரச்னை

ஸ்திரேலியாவின் வடக்கு எல்லைப்பிராந்திய போலீஸ் காவல் நிலைய மொன்றில் நியமிக்கப் பட்டுள்ள பூர்வகுடி மோப்ப மனிதர்களில் ஒருவன்தான் பில்லி. நாம் அதிசயத்தில் மலைக்கும் இத்தகைய அபூர்வச் செயல்கள் அவர்களுடைய அன்றாட அலுவல்களாகும்.