பக்கம்:உலக அரங்கிலே உன்னத நிகழ்ச்சிகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

1867 நவம்பர், மெக்கன் ஸீ ஆற்றோரம் இரண்டு போலீஸ்காரர்களின் சவங்கள் கிடந்தன. சுரங்கத் தொழிலாளர்களின் சம்பளப் பணமான 10,000 டாலரைப் பாங்கியிலிருந்து வாங்கிக் கொண்டு வரும்வழியில் யாரோ அவர்களைச் சுட்டுத் தள்ளி விட்டு, பணத்தைக் களவாடிச் சென்று விட்டனர்.

கிரிஃபின் என்ற இன்ஸ்பெக்டரின் தலைமையில் போலீஸ் கோஷ்டி யொன்று கொலையாளிகளைப் பிடிக்கச் சென்றது. அதில் 19 வயது நிரம்பிய மோப்ப மனிதன் ஒருவன் இருந்தான். அவன் அந்த இரு போலீஸ்காரர்களின் அருகில் காணப்பட்ட காலடிகளைக் கூர்மையாகச் சில வினாடிகள் பார்த்தான். அடுத்தகணம் அவன் இன்ஸ்பெக்டர் கிரிஃபின் பூட்சுகளைப் பார்த்துக் கூச்சலிட்டான்: "நீர் தான் கொலைகாரன்!”

போலீஸ் கோஷ்டியே கிடு கிடுத்து அவன் மேல் பாயத் தயாரானது. ஆனால் கிரிஃபின் தன் குற்றத்தை ஒத்துக் கொண்டார். சூதாட்டத்தின் பிடியில் இறுகி, கடனில் மூழ்கிப் போயிருந்த அவர் பணத்துக்காக ஆசைப்பட்டு இந்த இரட்டைக் கொலையைப் புரிந்தார்! நீதிமன்றத்தில் அவருக்குத் தூக்கு தண்டனை கிடைத்தது. இதைத் தொடர்ந்து இந்த மோப்ப . மனிதர்கள் ஸ்தாபனமும் நிலைத்து விட்டது.