20
சிக் கடலில் ஆழ்ந்தனர். இவனை உடனடியாக போலீஸ் ஸ்டோனுக்கு அழைத்துச் சென்று இரு நாளைக்கு முன்பு பிரேதக்கிடங்கு ஒன்றில் வின்சென்லோ என்று தவறுதலாக, சடலம் ஒன்றை அடையாளம் கண்டு பிடித்ததாகத் தெரிவித்தனர்.
பழக்கடைகள் உள்ள மார்க்கெட்டுக்கு அலுவல் நிமித்தம் வின் சென்ஸோ சென்றிருந்தான். அந்த இடத்தில் இளைஞன் ஒருவன் லாரி ஏறி நசுக்கப் பட்டான், அந்தச் சடலம்தான் வின்சென்ஸோ என்று அடையாளம் கண்டுகொள்ளப் பட்டதே இத்தவறு நிகழக் காரணம்.
இங்கிலாந்தில் ஒரு பிரசவ விடுதி. பிள்ளைப் பேற்றுக்காகத் தாய் ஒருத்தி சேர்க்கப் பட்டிருந்தாள்.
திடீரென்று “குவா... குவா" என்ற ஒலி வெளித் தாழ்வாரம் வரை எதிரொலித்தது.
சத்தம் வந்தபோது, அந்தத் தாய்க்குக் குழந்தையே பிறக்க வில்லையாம்.!
பல நிமிஷங்கள் சென்றுதான் குழந்தை பிறந்தது.
வயிற்றிலிருக்கும் போதே குரல் கொடுத்த முதல் குழந்தை உலகத்திலேயே இது தானாம்!
அதிசயம்தான் !