பக்கம்:உலக அரங்கிலே உன்னத நிகழ்ச்சிகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

பாவம் நிருபர்!

ந்தக்கிழவர் பெர்னாஸ்மின் நூறாவது பிராயத்தைக் கடந்து விட்டார். பிறந்த தினவிழாவையும் சிறப்புடன் கொண்டாடினார். அப்போது அவரைப் படம் எடுக்க வந்தார் நிருபர் ஒருவர். படம் பிடித்தார். விடைபெறும் போது, “உங்களது நூறாவதாண்டு விழாவில் உங்களைப் படம் பிடிக்க மீண்டும் வரலாமென்று நம்புகிறேன்!" என்றார்.

அதற்குக் கிழவர் 'கட கட' வென்று சிரித்தார் "தாராளமாக வரலாம், வாலிபரே! எனக்குச்சந்தேகமில்லை !... நீங்கள் தான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறீர்களே? பின் ஏன் சந்தேகம் உமக்கு?" என்று மடக்கினார்.

பாவம், நிருபரின் முகம் தொங்கி விட்டது. !

ஆதிவாசி

நேபா எல்லைப்பகுதியில் சுபான்ஸிம் பிரிவில் ஹெலி காப்டர் விமானம் ஒன்று வந்து இறங்கியது. அதிலிருந்து உயர்ராணுவ அதிகாரிகளும் பெண், ஒருத்தியும் இறங்கினார்கள்.

அவர்களை வரவேற்க, 'ஆபாதானி' எனும் பழங்குடி மரபைச் சார்ந்த ஆதிவாசிகள் குழுவினர். ஓர் ஆதிவாசி அண்டிச் சென்று, அப்பெண்ணை hws|உறுத்|உறுத்துப்}}