பக்கம்:உலக அரங்கிலே உன்னத நிகழ்ச்சிகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

துப் பார்த்தார். இந்தப் பெண் மிகவும் நேர்த்தி யாக இருக்கிறாள். இவளை நான் திருமணம் செய்து கொள்கிறேன். இந்த விமானத்தையும் நானே விலைக்கு வாங்கிக் கொள்கிறேன் !” என்றார் அந்த ஆதிவாசி.

"இப்பெண் ஏற்கெனவே திருமணமானவர். இந்துமதச் சார்புடையவர். அம்மதப்படி, ஒருபெண் மறுமணம் செய்து கொள்வது தவறு!" என்றார் அதிகாரி.

"வேறு மதமாகயிருந்தால் என்ன ? எங்கள் மத்த்தில் சேர்த்துக் கொள்கிறோம், எங்கள் சமய மரபுப்பிரகாரம் ஓர் ஆண் எத்தனை பெண்களை, வேண்டுமானாலும் மணந்து கொள்ளலாம். எனக்குக் கூட. 'த்தனையோ மனைவிமார் உள்ளனர். இருந்தாலும் இம்மங்கையின் அழகு என்னை வசீகரப் படுத்திவிட்டது ! எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன். இவளை எனக்குத் திருமணம் செய்து தாருங்கள் ஐயா!" என்று மன்றாடினார் அந்த ஆதிவாசி.

அந்த ஆதிவாசியைச் சமாதானப் படுத்தி முடிbபதற்குள் அதிகாரிகள் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல !

ஆதிவாசியின் கவனத்தை ஈர்த்த அப்பெண் திருமதி இந்திரா காந்தி அவர்கள் !