உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அரங்கிலே உன்னத நிகழ்ச்சிகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

சிறுதுளி பெரு வெள்ளமல்ல

பாளையப்பட்டு ஜமீன் மாளிகையில் அவரது ஒரே மகனின் கலியாணத்தை முன்னிட்டு அமர்க்களப்பட்டது.

உணவு விடுதியில் வேண்டிய பொருள்கள் வேண்டுமளவு சேகரிக்கப் பட்டு விட்டன. பால் சேகரிப்பது மட்டுமே பெரும் பிரச்சினையாக நின்றது.

ஆஸ்தானகவி, பிரச்சினையைத் தீர்க்க யோசனை ஒன்று கூறினார்.

அதன்படி, ஒவ்வொருவர் வீட்டிலிருந்தும் கட்டாயமாக ஒருசெம்பு பால் கொண்டு வந்து, ஜமீன் மாளிகை முகப்பில் உள்ள பால்க் கொப்பரையில் சேர்பிக்க வேண்டும் என்று அந்த வட்டாரத்திலுள்ள குடிமக்கள் எல்லோருக்கும் பறை அறிவிக்கப்பட்டது.

அன்றுமாலை பால் சேமிக்கப் பட்டிருந்த பகுதி யைப் பார்வையிட வந்தார் ஜமீன்தார். பால் கொப்பரையில் பால் நிறைந்திருக்கவில்லை. தண்ணீர்தான் நிறைந்திருந்தது!

ஜமீந்தார் கைகளைப் பிசைந்தார். கவி மூளையை உருட்டினார்.