பக்கம்:உலக அரங்கிலே உன்னத நிகழ்ச்சிகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

வருமுன் காத்தல்!

டிக் கொண்டிருந்த புகை வண்டியில் யூத இளைஞன் தாவி, கிழவன் ஒருவன் பக்கத்தில் அமர்ந்து, "இப்பொழுது நேரம் எவ்வளவு ?" என்று கேட்டான்.

"ரெயில் கார்டிடம் அறிந்துகொள்."

"கையில் கடிகாரம் கட்டிக் கொண்டு மணி சொல்லத் தயங்குகிறீர்களே ? வெள்ளையர்கள் நிரம்பியிருக்கும் இவ்விடத்தில் ஒரு சகயூதனிடம் இவ்விதம் இங்கிதமில்லாமலா பேசுவது? அல்லது உமது கடிகாரம். ஸ்ட்ரைக்' செய்து விட்டதோ ?"

“நான் உன்னிடம் சரளமாகப் பேசினால், இதிலிருந்து நம்மிடையே சம்பாஷனை தொடங்கும். பின்பு நான், எவ்விடம் வசிக்கிறேன் என்று நீ வினவி, "நான் ஒருபோதும் அவ்விடம் வரவில்லையே ?" என்று முடிப்பாய். அதற்கு நான் உன்னை என் இல்லம் வரும்படி அழைப்பேன். அங்கு எனது அழகிய மகளைச் சந்தித்துக் காதலாகித் திருமணத்துக்கு 'ஒப்பும்படி என்னிடம் இறைஞ்சுவாய். நான் உன்னிடம் எவ்வளவோ, சகஜமாகவும் அன்பாகவும் பழகி விட்டு, கடைசியில் திருமணத்துக்கு ஒப்புதல் கேட்கும் பொழுது, கேவலம் ஒரு சொந்தக் கைக் கடிகாரம் வைத்திருக்காதவனுக்கா என் மகளை முடித்துக் கொடுப்பேன் ?" என்று சொல்வதைக் காட்டிலும்