இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
27
ணம் செய்தான். போக வேண்டிய இடத்தை அடைந்ததும், வண்டிச் சத்தம் என்ன வென்று கேட்டான், சிப்பாய்.
வண்டிக்காரன் ஆறு அணா என்பதற்காக ஆறு விரல்களைக் காட்டினான்.
அமெரிக்கச் சிப்பாய் ஆறுரூபாய் நோட்டுக்களை எடுத்துக் கொடுத்தான், வண்டிக்காரனிடம்.
அமெரிக்கன் வண்டியையும் குதிரையையும் கிரயம் செய்து விட்டதாக எண்ணிய வண்டிக்காரன், வண்டியையும் குதிரையையும் விட்டு விட்டு, வீடு நோக்கி நடக்கத் தொடங்கினான்!
கோழிக் கோட்டில் நடந்தது இந்த உண்மைச் சம்பவம்.
நாலடி நீளமுள்ள நல்லபாம்பு அந்த நாயரைக் கடித்து விட்டது.
ஆனால் அவரோ அப் பாம்பைப் பதிலுக்குக் கடித்தார். ஆத்திரம் தீருமட்டும் கடித்தார், பாம்புப் படத்தின் பகுதியிலெல்லாம் அழுத்தமாகக் கடித்தார்.