இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
28
பிறகு, கடிபட்ட பாம்பைத் தூக்கிக் கொண்டு, வைத்தியர் வீட்டுக்கு ஓடினார் நாயர் -- சுகுமாரன் நாயர்!
அவர், பிழைத்து விட்டார்.
ஆனால், பாவம், அந்த நல்லபாம்பு மடிந்து விட்ட து !...
பாம்பைப் பதிலுக்குக் கடித்த அந்த அதிசய மனிதர் பைத்தியமா?
அல்ல! அவர் அப்போது பாம்பைக் கடித்தபோது நல்ல குடிபோதையின் உச்சத்தில் இருந்தாராம்!...
தமிழ்த் தாத்தா என்று போற்றப்படும் மகா மகோபாத்தியாய உ. வே. சுவாமிநாதய்யரும் அண்ணல் காந்தியடிகளும் ஒரே மேடையில் பேசினார்கள் மறக்கமுடியாத இந்த அதிசயம் 1934 ஆம் ஆண்டில் நடந்தது. அப்போது தமிழ்த் தாத்தாவிடம், "நான் உங்களது மாணவனாக இருந்து தமிழ் கற்கப் பாக்கியம் செய்ய வில்லையே !”, என்று மகாத்மா குறைபட்டுக் கொண்டார். ஒரு விசேடம் என்ன தெரியுமா? காந்திஜிக்கு, அப்போது தமிழ் தெரிந்திருந்தது. !