இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
30
உலகத்தில் உள்ள சரித்திரப் புகழ் பெற்ற அதிசயங்கள் எத்தனை, தெரியுமா ?
ஏழு!
ஆனால், இப்பொழுது அந்த அதிசயங்களின் எண்ணிக்கையை அவரவர்கள் கூட்டியும் குறைத்தும் சொல்லி வருகிறார்கள்.
அந்தப் பிரச்சினை எப்படியாவது திண்டாடட்டும்.
ஆனால், அசலான ஏழு அதிசயங்களை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும் அல்லவா?
இதோ, அந்தப் பட்டியல் :
1. எகிப்து நாட்டின் பிரமிட்கள்
2. பாபிலோனிலுள்ள தொங்கும் தோட்டம்
3. மாகலாஸ் சமாதி
4. தாஜ்மஹால்
5. ரோட்எல் சிலை
6. பைசா நாட்டுச் சாய்ந்த கோபுரங்கள்
7. ஒலிம்பியாவின் ஜூபிடர் சிலை