இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
31
உலகில் 30 மொழிகளில் இதுவரை திருக்குறள் இடம் பெற்றிருக்கிறது.
பர்மிய மொழியில் திருக்குறளை மொழி பெயர்த்தவர் : ஊமியோத்தாண்ட்.
வர்த்தகர் ஒருவர் தமது தொழில் சம்பந்தமாக அடிக்கடி, வெளியூரில் பிரசங்கங்கள் செய்ய வேண்டி யிருந்தது. அவர் பல விகடத் துணுக்குகளைச் சொல்வார். ஆனால் சபையோர் ரசிப்பதில்லை. இது அவருக்குப் பெரிய மனக் குறையாக இருந்தது.
ஒரு நாள்
பைபிளிலிருந்து ஒரு மேற்கோள் கூற விரும்பினார். ஆனால், பாவம் ஞாபகத்திற்கு வரவில்லை. சட்டைப் பையைத் துழாவினார்.
பிரசங்கியின் இந்த அவஸ்தையைக் கண்டு, சபையோர் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
இந்தத் துரதிர்ஷ்டத்திலிருந்து வர்த்தகர் ஓர் உண்மையான ரகசியத்தை அறிந்து கொண்டார். அதாவது, மக்களை தம் வாக்கைக் கேட்டுச் சிரிக்கச்