7
ஓர் ஆசிரியருக்கு விலாவில் பெரிய சிரங்கு புறப் பட்டது. ஒரு டாக்டரிட்ச்ம் ஓடினார்.
டாக்டர் "சூடாகப் பற்றுப் போடுங்கள். ஆறி விடும்!" என்று சொல்லி பற்றுப் போடுவதற்கான விவரத்தைச் சொன்னார்.
வீட்டிலே ஆசிரியரின் சமையல்காரி இதைக் கேட்டு, "பூ! சூடான பற்றும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம். குளிர்ச்சியான பற்றுப் போடுவது தான் நல்லது!" என்றாள்.
ஆசிரியர் வேறு வழியில்லாமல், சமையற்காரியின் இஷ்டப்படியே, குளிர்ச்சியான பற்றையே போட்டுக் கொண்டார்.
என்ன ஆச்சரியம்! இரண்டே வேளையில் சிரங்கு அமுங்கிப்போய் விட்டது!
ஆசிரியர் மீண்டும் டாக்டரிடம் போய், "சிரங்கு முற்றும் குணமாகி விட்டது. ஆனால், நீங்கள் சொன்னபடி நான் சூடான பற்றுப்போட்டுக்கொள்ளவில்லை. என் சமையல்காரி குளிர்ச்சியான பற்றுப் போடும்படி சொன்னாள். அதுதான் சிரங்கைக் குணப் படுத்தியது!" என்றார்.
டாக்டர் பிரமித்தார் : "இதென்ன வேடிக்கையாக இருக்கிறதே! சூடான பற்றுப் போடும்படி யோசனை சொல்லும்படி அல்லவா என்னிடம் என் சமையற்காரி சொன்னாள் !"...... என்றார்!