பக்கம்:உலக அரங்கிலே உன்னத நிகழ்ச்சிகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

பலகை தொங்க விடப்பட்டது. அதில், "சினிமா ஸ்டூடியோ-சத்தம் போடாதே!" என்று இருந்தது.

மறுதினம் எதிர்பார்த்ததைவிடச் சத்தம் அதிகமாகக் கேட்டது. காரணம் என்ன என்கிறீர்களா? ஆகாய விமானிகள், விளம்பரப் பலகையில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக, ஸ்டூடியோவின் தலை மீதே பறக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது?

ஞாபக மறதி வாழ்க!

நியூயார்க்கிலே ஏராளமான பொருட்செலவில் ஒரு தபால் நிலையம் நிறுவப்பட்டது. திறப்பு விழா முடிந்ததும், ஆயிரக்கணக்கான புகார் மனுக்கள் தபால் மேலதிகாரிக்குப் பறந்தன! "இவ்வளவு பெரிய கட்டடத்தில் கடிதங்கள் போடுவதற்குத் தபால் பெட்டி இல்லை"

கட்டடம் கட்டியவர் சொன்ன பதில் இதோ: "ஏன் பதறுகிறீர்கள் ? ஜனங்களிடமிருந்து வரும் கடிதங்களை நீங்களே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். தபால் பெட்டியைக் கட்டி முடித்து விடுகிறேன். மனிதன் என்றால் ஞாபகமறதி சகஜங்தானே, ஸார்?"