பக்கம்:உலக அரங்கிலே உன்னத நிகழ்ச்சிகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

மதுவால் நல்லவன்!

____________________________________________________________________________

    செங்கிஸ்கான் கொடியவன், கொள்ளைக்காரன். பெரிய குடியனும் கூட.
    மன்னனைத் திருத்த அவனது மந்திரி எவ்வளவு முயன்றும், முடியவில்லை. ஒருசமயம், மன்னனின் மதுபானக் கோப்பையைப் பார்த்தார். உடனே அதை அரசனிடம் எடுத்துப் போனார். "மதுபட்டுப் பட்டு இரும்புப் பாண்டத்துக்கே இக்கதி வருமானால், தங்கள் உடம்பு என்ன ஆவது?" என்றாராம். 
    செங்கிஸ்கான் அப்புறம் மதுவை நினைக்கவேயில்லையாமே! 

ஜெமினி

____________________________________________________________________________

    விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா சமீபத்தில் நிகழ்த்திய சாதனை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தப் படத்தில் இருக்கும் திரு பிராங்க் பார்மனும், திரு ஜேம்ஸ்லோவலும் ஜெமினி 7 என்ற அந்த விண்வெளிக் கப்பலில் பிரயாணம் செய்த வீரர்கள். இவர்கள் பதினாலு தினங்கள் விண்வெளியில் தங்கி 65.லட்சம் மைல்கள் பிரயாணம் செய்தார்கள். 206 தடவை பூமியைச் சுற்றி வந்தார்கள்.
    இவர்களை 'ஜெமினி 6' என்ற விண்வெளிக் கப்பலில் சென்ற இரு வீரர்கள், நடு வானில் சந்தித்த சாதனையும் பிரமிக்கத் தக்கது!