பக்கம்:உலக அரங்கிலே உன்னத நிகழ்ச்சிகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

சாபம்!

மெரிக்கப் போர் விமானம் ஒன்று ஸ்பெயினில் நொறுங்கிவிழ, அதன் விளைவாக, நான்கு அணு குண்டுகள் விழுந்து சிதறின.

அவற்றைத் தேடி 4000 அமெரிக்க இராணுவ வீரர்கள் ஸ்பெயின் நாட்டுக் காடுகளிலும் புதர்களிலும் தேடுகின்றனர். எந்த நேரத்தில், மிச்சமிருக்கும் இரண்டு அணு குண்டுகள் வெடிக்குமோ என்று பீதியில் ஆழ்ந்திருக்கின் றனராம் ஸ்பெயின் மக்கள். "அமெரிக்காவும் அணுகுண்டுகளும் ஒழிக!"என்று கோஷங்களையும் செய்கின்றனராம்!

நாளதுவரை அவ்விரண்டு அணுகுண்டுகளும் கிடைக்க வில்லையாம்!

அதிசயக் காடு

குழந்தைகள் விளையாடுவதற்கு உகந்த அழகுடன் 'தண்ணீர்க் காடு' என்று மேற்கு ஜெர்மனியிலுள்ள டஸ்ஸல் டார்பில் அமைக்கப் பட்டுள்ளது. ஒரு விசாலமான மண்டபத்தில் உள்ளீடற்ற 13 பிளாஸ்டிக் உருளைகள் தூண்களைப் போல் நிறுத்தப் பட்டுள்ளன. தூண்களுக்குள் பொருத்தப் பட்டுள்ள மின் விளக்குகள் எரியும்போது, ஒளி வெள்ளம் சூரிய கிரணங்களுடன் கலந்து அம் மண்டபத்தை ஒளிக் கடலாக்குகிறது. அந்த அழகிய ஒளி வெள்ளத்தின் சூழலிலே குழத்தைகள் ஆனந்தமாக விளையாடி மகிழ்கின்றனர்

!