பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

உலக அறிஞர்களின்



ஏறக்குறைய 85 ஆண்டுகள் இந்த வையத்தில் வாழ்ந்த அந்த வாழ்வியல் வழிகாட்டியான அவர், "மக்கள் இடையே கருணையும், உடன்பிறப்பு உணர்வுமே மனித வாழ்வில் பெறுவதற்காக முயற்சிக்க வேண்டிய பேருணர்ச்சி அதுதான் அன்பு எனப்படும் பண்பு' என்று அவர் அடையாளம் காட்டியுள்ளார்.

"நாம் அறியாதவரிடம் காட்டும் அன்பு, அறிந்தவரிடம் காட்டிடும் அன்பைப் போலவே ஓர் அழியாத உணர்ச்சியின் ஊற்றுக் கண்" என்று, கி.பி.1874ல் தோன்றி, கி.பி. 1936ல் மறைந்த ஆங்கிலப் பேரறிஞரான செஸ்டர்டன் கூறுகிறார் . ஜார்ஜ் எலியட் என்பவர் ஓர் எழுத்துலகப் பெண்ணரசி! சிறந்த ஆங்கிலப் பெருங்கவிஞரான இந்த அம்மையார் கி.பி.1819ஆம் ஆண்டில் பிறந்து கி.பி.1880-ல் ஏறக்குறைய 61 ஆண்டுகாலம் வாழ்ந்த ஒரு நாவலாசிரியை. அவர் என்ன சொல்கிறார் 'அன்பு' என்ற மனித உணர்வைப் பற்றி! பார்ப்போமே!

'அடக்கமும், அன்பும் துன்பங்களால் கற்றுக் கொள்ள வேண்டிய தத்துவ உணர்வுகளாம்! எவ்வளவு சுருக்கமாக அந்தப் பெண்மணி கூறுகிறார் பார்த்தீர்களா?

பர்ன்ஸ் என்ற இந்த கவிஞர், ஸ்காட்லாந்து நாட்டிலே கி.பி.1759-ஆம் ஆண்டு பிறந்து கி.பி. 1796ல் மறைந்த மகாகவி. இவர் 'அன்பு' பற்றி விளக்கும் போது,

'தவறு தெரிந்து செய்தாலும், உனது உடன் பிறப்பு என்பதற்காக விட்டுவிடாதே, ஆராய்வாயாக! அதைவிட, உனது உடன் பிறந்தான் உன்னிடம் உன்னதமான