பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

117


என்பது அவைகளைத் தேவையுள்ளவர்க்கு அனுகூலமாக உபயோகிப்பதாகும். தாராளமிலாச்சிக்கனம் பிறர் பொருளில் ஆசையைப் பிறப்பிக்கும். சிக்கனமிலாத் தாராளம் வீண் பொருள் விரயத்தை விளைவிக்கும்.

-பென்

சிக்கனம்-அதுவும் ஒரு வித வருமானமே.

-லெனிக்கா

வருமானத்தைவிடக் குறைவாகச் செலவு செய்ய அறிந்துவிட்டால் ரசவாத ரகசியத்தை அடைந்து விட்டவர் ஆவோம்.

-பிராங்க்லின்

தந்தை மகற் காற்றும் உதவி அதிகம் வைத்துப் போவதன்று குறைவானதைக் கொண்டு சரியாக வாழக் கற்பிப்பதே.

-பென்

வேண்டாத வஸ்து ஒரு நாளும் மலிவான தன்று. அது காசுக்கு ஒன்றானாலும் கிராக்கியே.

-ப்ளுட்டார்க்

சிக்கனம் என்பது வருவாய்க்குத் தக்க செலவு செய்தல். அது ஒரு அறமன்று, அதற்கு அறிவும் திறமையும் தேவையில்லை.

-பழமொழி

செலவு செய்தாலும் சிக்கனமாக இருப்பவனே இன்ப வாழ்வினன். அவனே இரண்டுவித இன்பமும் துய்ப்பவன்.

-ஜாண்ஸன்

★ ★ ★


45. கஞ்சன்

செலவாளி தன் வாரிசைக் கொள்ளையடிக்கிறான். ஆனால் உலோபியோ தன்னையே கொள்ளையடித்து விடுகிறான்.

-லா புரூயர்