பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

121


வருந்துவோர் அருகிருப்பது மகிழ்வோருக்குப் பாசக வேயிருக்கும். ஆனால் மகிழ்வோர் அருகிருப்பது வருந்துவோர்க்கு அதனிலும் அதிகப் பாரமாக இருக்கும்.

-கதே

பெற்றது சிறிதேனும் திருப்தியுற முடியாதவன் முடிவிலாத் தண்டனை அனுபவிப்பவனாவான்.

-காரிக்

அதிர்ஷ்டம் அதிகமாக அளிக்கக் கூடும், ஆயினும் அதிகத்தைப் போதுமானதாக்குவது மனமே.

-பாயில்

விரும்புவதைப் பெற முடியாதாகையால் பெற முடிவதை விரும்புவோமாக.

-ஸ்பானிஷ் பழமொழி

ஈயே! போ, உனக்கேன் துன்பம் இழைக்க வேண்டும்? இருவர்க்கும் உலகில் இடம் உளதே.

-ஸ்டோன்

திருப்தியுள்ள பன்றியாயிருப்பதினும் திருப்தியில்லா மனிதனாயிருப்பதே நலம். திருப்தியுள்ள மூடனாயிருப்பதினும் திருப்தியில்லா ஞானியாயிருப்பதே நலம். பன்றியும் மூடனும் வேறாக நினைத்தால் அதற்குக் காரணம் அவர்களுக்குத் தங்கள் கட்சி மட்டுமே தெரியும்; இரண்டு கட்சியையும் பிறரே அறிவர்.

-மில்

அனுபவித்துத் தீரவேண்டியதற்கு எதிராக வாதமிட்டுப் பயனில்லை. வாடைக் காற்றுக்கு ஏற்ற வாதம் இறுகப் போர்த்திக் கொள்வது ஒன்றே.

-லவல்

திருப்தியுள்ள மனமே தீராத விருந்து.

- ஆங்கிலப் பழமொழி