பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

125


பிறர் பாரத்தைத் தாங்கிக் கைகொடுத்தால் நம் பாரம் கனம் குறையும்.

-ஆவ்பரி

உபகாரமானது செய்த சேவையில் அடங்காது. செய்தவனுடைய நோக்கத்திலேயே அடங்கும்.

-ஸெனீக்கா

உண்மையாளர்க்கு உதவியின் மதிப்பு உதவுவார் மதிப்பளவே யாகும்.

-டெனிஸன்

பிறர் செய்த உபகாரம் அதிகமாக உன் கையில் தங்கவிடாமல் பார்த்துக்கொள், ஜாக்கிரதை.

-எமர்ஸன்

நம் விளக்கை ஏற்ற பிறன் விளக்குக்குச் செல்லுதல் நலமே. ஆனால் நம் விளக்கை ஏற்றாமல் அவன் விளக்கருகே அதிக நேரம் தாமதித்தல் நலமேயன்று.

-ப்ளுட்டார்க்

பெறுபவன் மதிக்குமளவே பெறுகின்ற உதவியின் மதிப்பாகும்.

-பப்ளியஸ் ஸைரஸ்

கெட்டவன் கொடை நன்மை கொடுப்பதில்லை.

-யுரிப்பிடீஸ்

பிறர் உன் விளக்கை உபயோகித்துக் கொள்ளட்டும். ஆனால் உன் விளக்கு சிறிதேயாயினும் அதிலுள்ள நெய்யைக் கொடுத்துவிட மட்டும் சம்மதிக்காதே.

- மேட்டர்லிங்க்

அதிகமாக நேசிப்பவன் அதிகமாக உதவி செய்பவன்.

-அக்கம்பிஸ்

★ ★ ★