பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

உலக அறிஞர்களின்


ஜீவராசிகள் அனைத்திடமும் அன்பு செய்யத் துண்டுவதே உண்மையான கல்வி. ஆனந்தம் அளிப்பதும் அதுவே.

-ரஸ்கின்

சரியான வழியில் சந்தோஷம் அடையச் செய்யாத கல்வி எல்லாம் வீணேயாகும்.

-ரஸ்கின்

நடை எழுதவும் இசை பாடவும் உருவந்தீட்டவும் முழு வல்லமை பெற்றபொழுதே கல்வி முற்றுப் பெறும்.

-ரஸ்கின்

சொந்தக் காரியம் பொதுக் காரியம் எல்லாவற்றையும் நியாயமாயும் சாமர்த்தியமாயும் பெருந்தன்மையாயும் செய்யக் கற்றுக் கொடுப்பதே பரிபூரணமான கல்வியாகும்.

- மில்டன்

இளஞ்சிறார் செவிமடுக்க வேண்டிய மொழிகள் இவையே 'உனக்குவேண்டியதை நீயே உண்டாக்கிக் கொள்ளலாம். நீ பட்டினி இருப்பதும் இல்லாததும் உன் முயற்சியைப் பெறுத்ததேயாகும்.'

- மெல்போர்ன்

இளமையில் கல்வியைப் புறக்கணித்தவன் இறந்த காலத்தை இழந்தவன், எதிர்கால விஷயத்தில் இறந்தவன்.

-யுரீப்பிடீஸ்

குழந்தைகளை முதலில் 'மனிதர்' ஆக்குங்கள். பின்னால் 'மதானுஷ்டானிகள்' ஆக்காலம்.

-ரஸ்கின்

குழந்தையை எத்தகைய வழ்விற்குத் தயார் செய்ய வேண்டும் என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ளா