பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

131


விட்டால் ஆசிரியன் எவனும் கல்வி அபிவிருத்தி செய்ய முடியாது.

-ரஸ்கின்

மாணவனிடம் செய்ய முடியாததைச் செய்யச் சொல்லாதவரை, அவன் செய்ய முடிந்ததையெல்லாம் ஒரு பொழுதும் செய்யப் போவதில்லை.

-மில்

சிறுவர்க்கான பிரதமக் கல்வி, அறிவு ஊட்டுவதன்று. நல்ல வழக்கங்கள் அமைப்பதேயாகும்.

-போனால்டு

மாணவர் அறிவதற்கு உத்தேசிக்கப்பட்டதை மட்டுமே அறியும் ஆசானைவிட பயங்கரமான பொருள் ஒன்றும் உலகில் கிடையாது.

-கதே

பொய்க் கல்வி பெருமை பேசும் மெய்க் கல்வி தாழ்ச்சி சொல்லும்.

-ரஸ்கின்

மூடர்முன் முற்றக் கற்றவனாகக் காட்சிக் கொள்ள விரும்புகிறவன் முற்றக் கற்றவர்முன் மூடனாக்க் காட்டிக் கொள்கிறான்.

-குன்றிலியன்

அதிகம் கற்றவரே அற்பமாகவே தெரியும் என்று அறிந்து கொள்ளக் கூடியவர்.

- ஆவ்பரி

இரண்டுவிதக் கல்விப்பயிற்சி உண்டு-பிறரிடம் பெறுவது, ஒன்று தன்னிடமே பெறுவது ஒன்று. இரண்டிலும் இதுவே ஏற்ற முடையது.

-கிப்பன்

யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். போதிப்பவர் எல்லோரும் ஆசிரியர் ஆகிவிடமாட்டார்.

-கதே

கல்வியில்லாத ஆன்மா பணி செய்யாத சலவைக் கல்.

-அடிஸன்