பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

உலக அறிஞர்களின்


நம் மனத்தைக் கல்வியிடம் ஈடுபடுத்தற்கு ஆசிரியரிடம் இருக்க வேண்டிய இரண்டு முக்கிய சக்திகள் புதியதை அறிந்ததாகச் செய்வதும், அறிந்ததைப் புதியதாகச் செய்வதுமாகும்.

-தாக்கரே

அதிகம் படிப்பவன் அகந்தை உடையான், கல்வியைக் காட்டுவதில் கருத்துடையான், அதிகம் பார்ப்பவன் அறிவு உடையான், அயலாருடன் வாழ்வான், அவர்க்கு உதவுவான்.

-லிச்சென்பரி

அவன் கலாசாலை வழியாகச் சொன்றானா என்று கேளாதே. கலாசாலை அவன் வழியாகச் சென்றதா என்று மட்டுமே கேள்.

-காட்லின்

வாழ்வில் வெகு முக்கியமாய்க் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் எங்ஙனம் வாழ்வது என்பதே.

-ஆவ்பரி

கற்பது கடினம், ஆனால் அதை விடக் கடினம் கற்பதை மறப்பது.

-ஆவ்பரி

கல்வி கற்பிக்கும் ஆசிரியன் நூலறிவைப் புகட்டும் பொழுது மெய்யறிவை மறந்து விடலாகாது. டெம்பிள் ஆராய்ச்சி முறையை ஒட்டிய கல்வி முறையே இணையற்றதாகும்.

-பர்க்

வாழக் கற்பிப்பவன் மரிக்கவும் கற்பிக்கக் கட்வன்.

-யங்

செடியின் மூட்டில் மண்ணை அணைத்து வை. ஆனால் மலருக்குள் விழுந்து விடாமற் பார்த்துக் கொள். உலக