பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

135


54. கவிதை

பெரிய கவிஞன் ஒவ்வொருவனும் ஒரு ஆச்சாரியனே. அவ்விதம் கருதப்படவே நானும் விரும்புகின்றேன்.

-வோர்ட்ஸ்வொர்த்

ஆராய்ச்சி என்பது மரத்திலிருந்து அடிக்கடி பூக்களுடன் புழுக்களையும் எடுத்துக் கொள்ளும்.

-ரிக்டர்

கூறியது யார் என்று அறிவதற்குக் கூறியதை மட்டுமே ஆராய்க.

-ஆக்கம்பிஸ்

ஆறுதலளிக்கும் தோத்திரப் பாடல்கள் மனத்தைச் சந்தோஷமும் சாந்தியும் உள்ள நிலைமையில் வைக்கும்.

-பேஸில்

நம்மை அறியாமலே நம்முடைய மனத்திற்குள் புகும் போதனையே நாம் கவி மூலம் பெறும் போதனை.

-லாம்

இதயத்தில் நல்லுணர்ச்சிகளை ஏற்படுத்துவதைத் தவிர ஏனையவெல்லாம் பேதமை என்று கருதுவதே கவிஞனின் நோக்கமும் தொழிலுமாகும்.

-ஸ்காட்

உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.

-வோர்ட்ஸ்வொர்த்

கவிச்சுவையும் உணர்ச்சியும் பொருந்திய இலக்கியங்களே தினசரி உபயோகத்திற்குத் தேவை.

-ஹாரிஸன்

உயர்ந்த லட்சியங்களுக்காக உத்தம புருஷர்கள் அனுபவிக்கும் இன்பத்தையேனும் துன்பத்தையேனும்