பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

136


உணர்ச்சி உண்டாக்கும் சிறந்த முறையில் வெளியிடுவதே உண்மையான கவிகள்.

-ரஸ்கின்

இலக்கிய ஊழியர் மட்டுமல்ல, எந்தப் பொது ஜன ஊழியரும் எளிய முறையிலேயே வாழவேண்டும் என்பது என் அபிப்பபிராயம்.

-வோர்ட்ஸ்வொர்த்

தன் வாழ்வில் ஒருமுறையேனும் கவிஞனாய் இருந்திராதவன் துர் அதிர்ஷ்டசாலியே.

-லாமார்ட்டைன்

அனாவசியமாக அதிகமாயிருப்பவற்றை அகற்றுவதே அழகு எனப்படுவதாகும்,

-மைக்கேல் ஆஞ்சலோ

அழகுடைய பொருள் அந்தமில் ஆநந்தம் ஆகும்.

-கீட்ஸ்

நாம் செய்ய வேண்டியதைக் காட்டுபவர் தீர்க்கதரிசி; நாம் நேசிக்க வேண்டியதைக் காட்டுபவர் கவிஞர்.

-கார்லைல்

அனைவரிடத்திலும் கவிதையம்சம் உண்டு. முற்றிலும் கவிதையம்சமாக உள்ளவர் யாருமிலர். கவிதையைச் சரியாக வாசிக்கக் கூடியவர் அனைவரும் கவிஞரே.

-கார்லைல்

கவிதை துக்கத்தின் சகோதரி. துக்கம் அறிந்தவன் கவிஞன். ஒவ்வொரு கண்ணீர்த்துளியும் ஒருகவி, ஒவ்வொரு இதயமும் ஒருகீதம்.

-ஆண்ட்ரே

கவிதையின் லட்சியம் நன்றாய் யோசிக்கச் செய்வதன்று, உண்மையை உணரச் செய்வதேயாகும்.

- ராபர்ட்ஸன்

உன்னிடம் கொஞ்சமாவது கவிதையில்லாவிட்டால் நீ எங்கும் கவிதையைக் காணமாட்டாய்.

-ஜூபெர்ட்