பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

உலக அறிஞர்களின்


கலைஞன் பேசுவது நம் அறிவோடன்று, மனத்தில், நாம் தேடாமல் கிடைத்த அம்சமொன்றுண்டு. அதனாலேயே அது அழியாதது. அந்த அம்சத்தோடு தான் கலைஞன் பேசுவான். அன்பு அழகு அச்சரியம் ஆநந்தம் இந்த உணர்ச்சியே அது.

-கோன்ராட்

நல்ல விஷயம் என்று எண்ணி நான் பாடுவதில்லை. என் மனோநிலைமை அல்லது என் வாழ்வில் ஏற்பட்ட சம்பவம், அதுவே என் பாடல்களுக்கு உற்பத்தி மூலம்.

-இப்ஸன்

அறிஞன் சமாதானப் பிரியர், ஆயுதம் பூண்பதில்லை. ஆனால் அவர் நாவோ கூடிவரக் கத்தியிலும் அதிகக் கூர்மையானது. அவர் பேனாவோ அதைவிட அதிகக் கூர்மை உடையது.

-ப்ரெளண்

ஒரு எளிய அழகான வாக்கியம் எழுதப் பல வருஷங்கள் ஒரு முகமாக உழைத்தால் முடியும் என்பதை அறிவேன்.

-டங்கன்

உண்மையான ஆசிரியனை உலகக் கஷ்டம் எதுவும் அடக்கிவிட முடியாது. ஒய்ந்துபோன ஆசிரியனை எவ்வித அதிர்ஷ்டமும் தூக்கி நிறுத்திவிட முடியாது.

-நாரிஸ்

படிப்போருடைய காலத்தை வீணாக்காமல் அதிகமான அறிவைக் கொடுக்கும் நூலை இயற்றும் ஆசிரியனே அதிகப் பயன் தருபவன் ஆவான்.

-ஸிட்னி ஸ்மித்

வாலிப ஆசிரியர்கள் தம் மூளைக்கு அதிகப் பயிற்சி கொடுக்கிறார்களேயன்றி போதுமான உணவு கொடுப்பதில்லை.

-ஜூபர்ட்