பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

உலக அறிஞர்களின்


மருந்து பல சமயங்களில் பலிக்காமல் இருக்கக் கூடும். ஆனால், விஷமோ ஒருபோதும் பலிக்காமல் போகாது.

-ரஸ்கின்

பாவம் செய்பவன் மனிதன் பாவத்துக்காக வருந்துபவன் ஞானி; பாவத்துக்காகப் பெருமை கொள்பவன் சாத்தான்.

-புல்லர்

சாத்தானுடைய பந்துக்களில் ஒருவரை வீட்டுக்குக் கூட்டிச் சென்றால் போதும், அவன் குடும்பம் முழுவதுமே குடிபுகுந்துவிடும்.

-ஆவ்பரி

ஒருவன் தன் ஒளியில் தான் நிற்கும்பொழுது உண்டாக்கும் நிழலே அவன் வாழ்வில் அதிக இருள் உடையதாகும்.

-ஆவ்பரி

தீச் செயல் நம்மைத் துன்புறுத்துவது, செய்த காலத்தில் அன்று. வெகு காலம் சென்று அது ஞாபகத்திற்கு வரும்பொழுதுதான். அதற்குக் காரணம் அதன் ஞாபகத்தை ஒருபொழுதும் அகற்ற முடியாததே.

-ரூஸோ

மனிதன் பிறர்க்குக் கேடு சூழ்வதில் தனக்கே கேடு சூழ்ந்துகொள்கிறான்.

-ஹேஸியாட்


அறத்திற்குப் போலவே மறத்திற்கும் பிராணத் தியாகிகள் உண்டு.

-கோல்டன்

தீய செயல் குறித்துத் தெய்வத்தின் முன் நாணாமல், மனிதன் முன் நாணக் கற்றுக்கொள். அப்பொழுதே விமோசனம் ஆரம்பமாகும்.

-ரஸ்கின்