பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

உலக அறிஞர்களின்


உண்மையாக இருக்கத் துணிக. ஒன்றிற்கும் பொய் வேண்டியதில்லை. பொய்யை விரும்பும் குற்றம் அதனாலேயே இரண்டு குற்றமாய்விடும்.

-ஹெர்பர்ட்

சுருதிக்காக அறிவை அகற்றுபவன் இரண்டின் ஒளியையும் அவிப்பவனாவான். அவன் செயல், க்ண்ணுக்கு எட்டா நட்சத்திரத்தைத் தூர திருஷ்டிபக் கண்ணாடி வழியாய்த் தெளிவாய்ப் பார்ப்பதற்கு என்று கண்களை அவித்துக் கொண்டது போலாகும்.

-லாக்

தவறு ஒன்றுதான் சர்க்கார் தயவை வேண்டும். உண்மைக்கு அது வேண்டியதில்லை.

-தாமஸ் ஜெவ்வர்ஸன்

எந்தப் பொய்யும் வயோதிகம் அடையும் வரை வாழ்ந்ததில்லை.

-லோபோகிளீஸ்

மனிதனுடைய முதல் மொழி 'ஆம்' இரண்டாவது 'அன்று'; மூன்றாவதும் இறுதியானதும் 'ஆம்'. பலர் முதலாவதோடு நின்று விடுவர்; வெகு சிலரே இறுதி மொழிவரை செல்வர்.

-பழமொழி

முதலில் தூசியைக் கிளப்பி விடுகிறோம். பின்னால் பார்க்க முடியவில்லை என்று முறையிடுகிறோம்.

-பிஷப் பார்க்லி

மெய்யும் பொய்யும் கை கலக்கட்டும். பகிரங்கமாகக் கை கலந்து போர் புரியின், என்றேனும் மெய் தோல்வியடைந்ததைக் கண்டவர் உளரோ?

- மில்டன்

பாவத்திற்குப் பல கருவிகள் உண்டு. ஆனால் அவற்றிற்கெல்லாம் பொருத்தமான கைபிடி பொய்.

-ஹோம்ஸ்