பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

45


தத்துவ ஞானம் கற்பது என்பது, 'தான்' சாகத் தயராக்குவதேயன்றி வேறன்று.

-ஸிஸரோ

தத்துவ சாஸ்திரிகள் உலக விவகாரங்களைப் பற்றித் தர்க்கித்துக்கொண்டிருப்பர். ஆனால் அதற்கிடையில் உலகை நடத்திச் செல்வன பசியும் காதலுமேயாம்.

-ஷில்லர்

நமது தத்துவ சாஸ்திரத்தில் நாம் கனவு கண்டும் அறியாத பல விஷயங்கள் விண்ணிலும் மண்ணிலும் உண்டு.

-ஷேக்ஸ்பியர்

ஒருவன் யாரிடம் பேசுகின்றானோ அவனுக்குப் பொருள் விளங்காமலும், பேசுகின்ற தனக்குப் பொருள் விளங்காமலும் இருந்தால், பேசுவது தத்துவ சாஸ்திரமாகும்.

-வால்டேர்

★ ★ ★


11. ஆன்மா

உடல்-அது மண்ணேயன்றி வேறன்று ஆன்மா-அது நித்தியத்தின் முகை ஆகும்.

-கல்வெர்வெல்

மனிதனையும் அவன் செயல்களையும் அடக்கியாள்வது ஜட சக்தி அன்று, ஆன்மா சக்தியேயாகும்.

-கார்லைல்

ஆன்மாவின் கதவை ஒரு விருந்தாளிக்கு ஒருமுறை திறந்து விட்டால், பின் யாரெல்லாம் உள்ளே வந்து புகுவர் என்று கூறிவிட முடியாது.

-ஹோம்ஸ்

அறிவு கண்ணில் விளங்கும்-அன்பு முகத்தில் விளங்கும்-ஆனால் ஆன்மா விளங்குவது மனத்தில் கேட்கும் அந்தச் சிறு குரலிலேயே.

-லாங்பெலோ