பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

உலக அறிஞர்களின்


நாளுக்கு நாள் ஏற்றம் பெற்றுவரும் லட்சியம் ஒன்று ஊழிகளை ஊடுருவி ஓடுகின்றதென்பதும், வருஷங்கள் ஆக ஆக மனிதர் கருத்துக்களும் விரிவடைகின்றன என்பதும் மெய்.

-டெனிஸன்

★ ★ ★


13. நன்மை-தீமை

நன்மை யென்றும் தீமை யென்றும் இல்லை; அவ்விதம் ஆக்குவது மனமே.

-ஷேக்ஸ்பியர்

'நன்மை, தீமை'- நம் அறியாமையால் எழும் இரு பெயர்கள்.

நம் மனத்திற்கு உகந்ததை நன்மை என்கிறோம், பிறர் மனத்திற்கு உகந்ததைத் தீமை என்கிறோம்.

'தீமை' - நமக்குத் தீங்கிழைப்பது. 'நன்மை' அநேகமாய்ப் பிறர்க்குத் தீங்கிழைப்பது.

- பால் ரிச்சர்டு

நேர் வழியில் அடைய முடியாததை ஒருநாளும் நேரல்லாத வழியில் அடைந்துவிட முடியாது.

-கதே

அற்ப விஷயங்கள் மனத்தைக் கலக்கினால் அதிரிஷ்டசாலி என்று அர்த்தம். துரதிர்ஷ்ட காலத்தில் அற்ப விஷயங்கள் உணர்ச்சிக்கு எட்டுவதில்லை.

-ஷோப்பனார்

எப்பொழுதும் நமது சூரிய ஒளியில் ஒரு கறுப்புப் புள்ளி உண்டு, நமது நிழலே அது.

-கார்லைல்

ஐயோ பேயை அடக்குவதினும் எழுப்புவது எளிது.

-காரிக்